close
Choose your channels

விக்ரம்-நயன்தாரா பார்ட்டியில் 2000 பேர்

Friday, July 15, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

முதல்முறையாக விக்ரம்-நயன்தாரா ஜோடியாக இணைந்து நடிக்கும் 'இருமுகன்' படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை நெருங்கிவிட்டது. சமீபத்தில் காஷ்மீரின் மிக அழகிய பகுதிகளில் படப்பிடிப்பு நடத்திய 'இருமுகன்' படக்குழுவினர் தற்போது அந்தமான் தீவுகளில் ஒன்றான Phuket தீவில் படப்பிடிப்பு நடத்தியுள்ளனர்.
சுத்தமான நீர், சுற்றிலும் மலையுடன் கூடிய இயற்கை எழில் வாய்ந்த இடமாக அமைந்துள்ள இந்த தீவில் உலகப்புகழ் பெற்ற Paradise Beach party என்ற பார்ட்டி நடந்தபோது 'இருமுகன்' படப்பிடிப்பு நடந்துள்ளது.
இந்த பார்ட்டியில் விக்ரம்-நயன்தாரா கலந்து கொள்வது போன்ற காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளது. ரியலாக நடந்த இந்த பார்ட்டியை படக்குழுவினர் டிஸ்டர்ப் செய்யாமல் ரகசிய கேமிரா மூலம் படமாக்கியுள்ளனர். விக்ரம், நயன்தாரா இருவருமே அனுபவம் வாய்ந்தவர்கள் என்பதால் கேமிராவின் கோணத்திற்கேற்ப இருவரும் நடித்து படக்குழுவினர்களுக்கு சிறப்பான ஒத்துழைப்பை அளித்துள்ளனர். இந்த காட்சிகள் திரையில் பார்க்க பிரமிப்பாக இருக்கும் என்று இயக்குனர் ஆனந்த்சங்கர் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment