தமிழகத்துக்குப் புது முதல்வர். ஓபிஎஸ் பதவி விலகல்

  • IndiaGlitz, [Sunday,February 05 2017]

முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா மரணமடைந்தபின் முதல்வராகப் பொறுப்பேற்றுக்கொண்ட ஓ.பன்னீர்செல்வம் பதவி விலகப் போகிறார் என்றும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் பொதுச் செயலாளர் வி;கே.சசிகலா தமிழகத்தின் அடுத்த முதலமைச்சராகப் பொறுப்பேற்பார் என்று கட்சியின் சார்பில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்று சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சித் தலைமை அலுவலகத்தில் அதிமுகவின் சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடந்தது. 45 நிமிடங்கள் நடந்ததாகக் கூறப்படும் அந்தக் கூட்டத்தில் கட்சியின் சட்டமன்றத் தலைவராக சசிகலா ஒரு மனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவரது பெயரை ஓபிஎஸ் முன்மொழிந்தார்.

இதன் மூலம் சசிகலா தமிழக முதல்வராக விரைவில் பொறுப்பேற்பார் என்று கட்சியின் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

நாளை (ஃபிப்ரவரி 6) அல்லது தைப்பூசத் திருநாளான வியாழக்கிழமை (ஃபிப்.9) அன்று சசிகலா முதல்வராகப் பதவிப் பிரமாணம் ஏற்றுக்கொள்வார் என்று கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும் பதவி ஏற்றவுடன் ஆளுநர் வித்யாசாகர் ராவை சந்தித்து நியதிப்படி, அரசு அமைப்பதற்கான அதிகாரத்தைக் கோருவார் சசிகலா என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழக வரலாற்றில், வி.என்.ஜானகி, ஜெயலலிதாவுக்குப் பிறகு மூன்றாவது பெண் முதல்வர் ஆகப் போகிறார் சசிகலா.

More News

தீர்ப்பு எப்படி இருக்கும். கடைசி நிமிடத்தில் ஆச்சார்யா கருத்து

ஜெயலலிதா, சசிகலா உள்பட நால்வர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கின் தீர்ப்பு எப்படி இருக்கும் என்று இந்த வழக்கில் கர்நாடக அரசு சார்பில் வாதாடிய ஆச்சார்யா கடைசி நிமிடத்தில் தனது கருத்தை தெரிவித்துள்ளார்...

கமல்ஹாசனை அடுத்து நந்தினிக்காக குரல் கொடுத்த திரையுலக பிரமுகர்கள்

சமீபத்தில் அரியலூர் அருகே நந்தினி என்ற 17 வயது இளம்பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது...

விஷாலின் வேட்புமனு மீது தேர்தல் அதிகாரியின் அதிரடி நடவடிக்கை

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் செயலாளர் விஷால், தயாரிப்பாளர் சங்க தேர்தலில் தலைவர் பதவிக்காக போட்டியிட நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார் என்பதை நேற்று பார்த்தோம். இவரது வேட்புமனுவை உலகநாயகன் கமல்ஹாசன் முன்மொழிந்தார் என்பது குறிப்பிடத்தக்கது...

பணத்தை விட சக்தி உள்ளது எது தெரியுமா? ரஜினிகாந்த்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் ஆன்மீகத்தில் மிகுந்த ஈடுபாடு உள்ளவர் என்பது அனைவரும் அறிந்ததே. இமயமலை உள்பட பல ஆன்மீக தலங்களுக்கு அவர் சென்று வழிபாடு நடத்தியுள்ளார். மேலும் பல்வேறு ஆன்மீக நிகழ்ச்சிகளிலும் அவர் கலந்து கொண்டு உரையாற்றியுள்ளார்....

சென்னை மெரீனா தடை உத்தரவு வாபஸ். காவல்துறை அறிவிப்பு

சென்னை மெரீனாவில் சமீபத்தில் நடைபெற்ற மாணவர்களின் எழுச்சிப்போராட்டத்தின் கடைசி தினத்தன்று ஒருசில சமூக விரோதிகளால் வன்முறை ஏற்பட்டது. இந்த வன்முறையால் மெரீனாவை சுற்றியுள்ள பகுதிகள் பெருமளவு பாதிக்கப்பட்டது. காவல்நிலையம் உள்பட பல இடங்களில் சமூக விரோதிகளால் தீ வைக்கப்பட்டது...