சகோதர பாசத்துடன் ரஜினியை வாழ்த்திய சசிகலா!

  • IndiaGlitz, [Sunday,December 12 2021]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில் அவருக்கு ஏராளமான ரசிகர்கள் சமூக வலைதளங்கள் மூலம் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர் என்பதை பார்த்து வருகிறோம். குறிப்பாக ஒட்டுமொத்த திரையுலகமும் அவருக்கு வாழ்த்து தெரிவித்தது என்பதும் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, முதலமைச்சர் முக ஸ்டாலின், சச்சின் டெண்டுல்கர், ஹர்பஜன் சிங் உள்ளிட்ட பல பிரபலங்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் அதிமுக பொதுச் செயலாளர் அறிக்கையின் வாயிலாக சசிகலாவும் ரஜினிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். அவரது பிறந்த நாள் வாழ்த்துக் கூறி இருப்பதாவது:

என் அன்பு சகோதரர் ரஜினிகாந்திற்கு என் இதயம் கனிந்த பிறந்தநாள் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். தங்களது அன்பும் நட்பும் சகோதரத்துவமும் என்றென்றும் நிலைத்திருக்க எந்நாளும் இறைவனின் அருள் கிடைக்க வேண்டும்.

நீண்ட ஆயுளோடும் நல்ல சுகத்தோடும் என்றென்றும் மகிழ்ச்சியோடு வாழ எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டுகிறேன் என்று தெரிவித்துள்ளார். சமீபத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களை சசிகலா நேரில் சென்று சந்தித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

2021ஆம் ஆண்டில் விஜய், கீர்த்தி சுரேஷ் முதலிடம்: அடுத்தடுத்த இடங்களில் யார் யார்?

2021 ஆம் ஆண்டில் டுவிட்டரில் அதிகம் பேசப்பட்ட தென்னிந்திய நடிகர்கள் மற்றும் நடிகைகள் யார் யார் என்ற விவரம் தற்போது வெளிவந்துள்ளது.

குறும்படத்திற்கு பின் அபினய்-பாவனியை வறுத்தெடுத்த கமல்ஹாசன்!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பாவனி மற்றும் அபினய் விவகாரம் கடந்த சில நாட்களாகவே வீட்டையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது என்பதும் இது குறித்து நேற்று கமல்ஹாசன் விசாரணை செய்தார் என்பதும் தெரிந்ததே.

'புஷ்பா' படத்தின் சமந்தா பாடலுக்கு திடீர் எதிர்ப்பு: நீதிமன்றத்தில் வழக்கு! 

பிரபல தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் நடித்த 'புஷ்பா' என்ற படம் வரும் 17ஆம் தேதி உலகம் முழுவதும் ரிலீஸ் ஆகவுள்ளது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் இந்த படத்தில் சமந்தா ஒரு பாடலுக்கு நடனம் ஆடி

பிறந்த நாளில் ரஜினியின் அதிரடி அறிவிப்பு: செளந்தர்யா ரஜினி தகவல்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில் இன்றைய பிறந்த நாளில் அவர் அறிவித்த அதிரடி அறிவிப்பு ஒன்றை அவரது இரண்டாவது மகள் சௌந்தர்யா ரஜினிகாந்த்

இளம் நடிகையை மணந்த பாடகி சுசித்ராவின் முன்னாள் கணவர்!

தமிழ் திரையுலகின் இளம் நடிகையை பாடகி சுசித்ராவின் முன்னாள் கணவரும் நடிகருமான கார்த்திக் குமார் திருமணம் செய்த புகைப்படங்கள் தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது.