மனைவி, குழந்தையுடன் விஜே விஜய்: க்யூட் புகைப்படங்கள்

  • IndiaGlitz, [Saturday,May 28 2022]

வானொலியில் விஜேவாக அறிமுகமாகி அதன் பின்னர் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியவர் விஜே விஜய் என்பதும் திரைப்பட இசை வெளியீட்டு விழாவையும் தொகுத்து வழங்கி வருகிறார் என்பது தெரிந்ததே. குறிப்பாக தளபதி விஜய் நடித்த ’மாஸ்டர்’ திரைப்படத்தை இவர் தொகுத்து வழங்கிய அழகை அனைவரும் ரசித்தனர். அதுமட்டுமின்றி பல பட்டிமன்றங்களில் இவர் கலந்து கொண்டுள்ளார் என்றும் இவரது இடைவிடாத சுவராசியமான பேச்சு இன்றைய இளைஞர்களை கவர்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் மோனிகா என்ற பெண்ணை கடந்த 2019ஆம் ஆண்டு திருமணம் செய்த விஜே விஜய்க்கு 2021ஆம் ஆண்டு ஆண் குழந்தை பிறந்தது. விஜே விஜய், தனது குழந்தைக்கு நவிலன் என்ற பெயர் வைத்துள்ளார்.

மேலும் கடந்த சில ஆண்டுகளாக திரைப்படங்களிலும் விஜே விஜய் நடித்து வருகிறார். குறிப்பாக சமீபத்தில் வெளியான ‘டான்’ திரைப்படத்தில் விஜே விஜய்யின் கேரக்டர் நல்ல விமர்சனத்தை பெற்றது.

இந்த நிலையில் விஜே விஜய் தனது மனைவி மற்றும் குழந்தையுடன் இருக்கும் புகைப்படங்கள் தற்போது வைரல் ஆகி வருகின்றன. விஜே விஜய்யின் க்யூட் குடும்பத்தின் புகைப்படங்களுக்கு நெட்டிசன்கள் லைக்ஸ்களை குவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.