ஜெயலலிதா மடியில் உட்கார்ந்து காபி குடித்த 'மாஸ்டர்' பட நடிகை!
- IndiaGlitz, [Sunday,February 28 2021]
விஜய் டிவியின் பிரபல தொகுப்பாளினியும் தளபதி விஜய் நடித்த ‘மாஸ்டர்’ படத்தில் நடித்த நடிகையுமான ரம்யா, குழந்தை பருவத்தில் இருந்தபோது முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மடியில் உட்கார்ந்து காபி குடித்ததாக சமீபத்தில் தெரிவித்துள்ளது பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது
விஜய் டிவியின் பிரபல தொகுப்பாளினியாக பணிபுரிந்து வரும் ரம்யா, மொழி, ஓ காதல் கண்மணி, மாஸ் என்கிற மாசிலாமணி, ஆடை உள்பட ஒருசில திரைப்படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் தனது பெற்றோருடன் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை சமீபத்தில் சமூக வலைத்தளத்தில் பதிவு செய்த ரம்யா, அந்த நிகழ்வு தனக்கு நன்றாக ஞாபகம் இருக்கிறது என்று கூறியுள்ளார். தான் இரண்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கும் போது தமிழகத்தின் அட்வகேட் ஜெனரலாக இருந்த தனது தந்தை அன்றைய முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்ததாகவும், அப்போது எங்களையும் அவர் அழைத்துச் சென்று இருந்தார் என்றும், என்னை பார்த்ததும், தூக்கி மடியில் உட்கார வைத்துக்கொண்டு ஜெயலலிதா அவர்கள் எனக்கு காப்பி கொடுத்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்
அந்த அரைமணி நேர சந்திப்பு தனது மனதில் இன்னும் நினைவில் இருக்கிறது என்றும் அவர் தனது மலரும் நினைவுகளை குறிப்பிட்டுள்ளார். மேலும் இது குறித்த புகைப்படத்தையும் அவர் பதிவு செய்துள்ள நிலையில் இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது