குளிக்கும்போதும் முழு மேக்கப்புடன் இருக்கும் தமிழ் நடிகை!

  • IndiaGlitz, [Monday,May 11 2020]

தொலைக்காட்சியில் விஜேவாக இருந்து பிரபலமாகி அதன்பின் தமிழ் திரையுலகில் நடிகையாக மாறியவர் ரம்யா. விஜே ரம்யா சமீபத்தில் நடித்த ’ஆடை’ திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றதை அடுத்து திரையுலகில் அவருக்குவாய்ப்புகள் குவிந்து வருகிறது என்பதும், தளபதி விஜய் நடித்துள்ள ‘மாஸ்டர்’ திரைப்படத்திலும் அவர் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் கொரோனா விடுமுறை காரணமாக அவ்வபோது தனது சமூக வலைத்தளத்தில் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வரும் விஜே ரம்யா தற்போது குளியல் புகைப்படம் ஒன்றையும் வெளியிட்டுள்ளார். கத்தரி வெயிலில் இருந்து தப்பிக்க இது போன்ற ஒரு குளியல் அவசியம் என்று அந்த புகைப்படத்தின் கீழே அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாகியபோதிலும், அவர் இந்த புகைப்படத்தில் முழு மேக்கப்புடன் இருக்கிறார் என்பதால், ‘குளிக்கும் போது எதற்காக முழு மேக்கப்’ என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி கிண்டல் அடித்து வருகிறார்கள். இருப்பினும் விஜே ரம்யாவின் குளியல் புகைப்படத்திற்கு ஆயிரக்கணக்கான லைக்ஸ் கிடைத்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது