10 ஆண்டாக திருமணத்தை மறைத்தது ஏன்? 'குக் வித் கோமாளி' பிரபலம் விளக்கம்!

  • IndiaGlitz, [Thursday,February 18 2021]

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ‘குக் வித் கோமாளி நிகழ்ச்சி அனைவரையும் கவர்ந்தது என்பதும் இந்த நிகழ்ச்சியில் குக்’களும், கோமாளிகளும் தரும் நகைச்சுவை நான் ஸ்டாப்பாக இருப்பதால் இந்த நிகழ்ச்சிக்கு நாளுக்கு நாள் ரசிகர்கள் அதிகரித்து கொண்டே உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் ரக்‌ஷன் சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மனைவியுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு தனக்கு திருமணமாகி 10 வருடங்கள் ஆகி விட்டதாக தெரிவித்திருந்தது அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதற்கு முன்னர் கலக்கப்போவது யாரு என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிக் கொண்டிருந்த போது அந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய சக தொகுப்பாளினி ஜாக்குலினுடன் காதல் என்றும் கிசுகிசு கிளம்பியபோதுகூட அவர் தனக்கு திருமணமானதை தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தற்போது ரக்சன் திருமணமானதை ஏன் 10 ஆண்டுகளாக மறைத்தார் என்ற ரசிகர்களின் கேள்விக்கு விளக்கம் அளித்துள்ளார். அதில் ’தினமும் நம்முடைய ஸ்டேட்டஸில் எப்படி காதலிக்கிறோம் என்று சொல்லிக் கொண்டிருப்பதை விட எப்படி காதலித்தோம் என அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தது தான் உண்மையான காதலின் வெற்றி’ என்று குறிப்பிட்டுள்ளார். ரக்சனின் இந்த பதில் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.


 

More News

Meetoo புகாரில் அவதூறு எதுவும் இல்லை- முன்னாள் பாஜக அமைச்சருக்கு எதிராக அதிரடி தீர்ப்பு!

கடந்த சில வருங்களுக்கு முன்பு பெண்களுக்கு இழைக்கப்படும் குற்றங்களுக்கு எதிராக சமூக வலைத்தளங்களில் டிரெண்டிங் இடத்தைப் பிடித்தது Meetoo.

யமாஹா பைக்கில் அட்டகாசமாக போஸ் கொடுத்த பிரபல தமிழ் நடிகை!

பிரபல தமிழ் நடிகை தனது சமூக வலைத்தளத்தில் யமஹா பைக்கில் உட்கார்ந்து அட்டகாசமான போஸ் கொடுத்திருப்பது வைரலாகி வருகிறது 

பிரபல ஹீரோவுடன் இணையும் லிங்குசாமி: இருமொழிகளில் உருவாகுவதாக அறிவிப்பு!

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான லிங்குசாமி தனது அடுத்த பட அறிவிப்பை வெளியிட்டுள்ளார் 

உன்னாவ் பகுதியில் மற்றொரு பயங்கரம்… வாயில் நுரைத்தள்ளி 2 தலித் சிறுமிகள் உயிரிழப்பு!

உ.பி. மாநிலத்தில் தொடர்ந்து பெண்களுக்கு எதிரான அசம்பாவிதங்கள் நடைபெற்று வருகின்றன.

உடைந்த பாட்டில்களை வைத்து… இந்திய அறக்கட்டளை செய்த கின்னஸ் சாதனை!

உடைந்த பாட்டில்களை வைத்து, மும்பை பகுதியில் செயல்பட்டு வரும் பிளாஸ்டிஇண்டியா எனும் அறக்கட்டளை புது கின்னஸ் சாதனையை படைத்து இருக்கிறது.