ரெண்டு அப்பாவி பசங்கள ஏமாத்தியிருக்கேன்: விஜே மணிமேகலையின் வைரல் வீடியோ
Send us your feedback to audioarticles@vaarta.com
கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பித்தது முதல் படப்பிடிப்பு இல்லாமல் வீட்டில் இருக்கும் முக்கிய நடிகர் நடிகைகள் பலர் தங்களது சமூக வலைதளங்களில் விளையாட்டுத்தனமான மட்டும் சீரியசான வீடியோக்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றனர்.
குறிப்பாக பிரபல விஜே மணிமேகலை தனது சொந்த கிராமத்தில் தற்போது இருக்கும் நிலையில் அந்த கிராமத்தில் உள்ளவர்களுடன் சேட்டைகள் செய்தும், ஒருசில சீரியஸான விஷயங்கள் செய்தும் அவ்வப்போது வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். அவருடைய வீடியோக்கள் அனைத்தும் சமூக வலைதளங்களில் பெரும் வரவேற்பைப் பெற்று வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் சற்று முன்னர் அவர் இரண்டு பசங்களுடன் குத்தாட்டம் ஆடிய நடன வீடியோவை தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் ’இந்த இரண்டு பசங்க கிட்டயும் நான் ஒரு நடனப் புயல்ன்னு சொல்லி ஏமாற்றி இருக்கிறேன். என்ன சொன்னாலும் நம்புவாங்க. ரொம்ப அப்பாவி பசங்க. இனிமேல் என்கூட நடனத்தில் யாரும் மோதக்கூடாது சொல்லிட்டேன்’ என்று பதிவு செய்துள்ளார். விஜே மணிமேகலையின் இந்த நகைச்சுவை பதிவுவுடன் கூடிய வீடியோ வைரலாகி வருகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Megha
Contact at support@indiaglitz.com
Comments