காதலரை திடீரென கரம் பிடித்த விஜே மணிமேகலை
Send us your feedback to audioarticles@vaarta.com
தனியார் தொலைக்காட்சி ஒன்றில் விஜேவாக பணிபுரிந்து வரும் மணிமேகலை தொலைக்காட்சி ரசிகர்களிடையே பிரபலமானவர். இவர் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சிகள் அனைத்துமே இளைஞர்களை கவரும் வகையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இவர் தன்னுடைய நீண்ட நாள் நண்பரான ஹூசைன் என்பவரை காதலித்து வந்தார். ஆனால் மணிமேகலையின் தந்தை இந்த காதலுக்கு சம்மதம் தெரிவிக்கவில்லை
இந்த நிலையில் இன்று திடீரென காதலர் ஹூசைனியை பதிவுத்திருமணம் செய்து கொண்டார் மணிமேகலை. இதுகுறித்து மணிமேகலை கூறியதாவது: 'எவ்வளவு போராடியும் என்னுடைய தந்தையின் மனதை என்னால் மாற்ற முடியவில்லை. அதனால் என்னுடைய குடும்பத்தை எதிர்த்து இன்று என் காதலனை கரம் பிடித்துள்ளேன். என்றைக்காவது ஒருநாள் என்னுடைய அப்பா எங்களை ஏற்றுக் கொள்வார் என்று நம்புகிறேன்' என்று கூறினார்.
மணிமேகலை-ஹுசைன் திருமணத்தை மணிமேகலையின் நண்பர்களும் ஹூசைனியின் உறவினர்களும் நடத்தி வைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Contact at support@indiaglitz.com