விஜே மகாலட்சுமியின் மாத வருமானம் இத்தனை லட்சமா? ஆச்சரியத்தில் ரசிகர்கள்

சமீபத்தில் தயாரிப்பாளர் ரவீந்திரனை திருமணம் செய்து கொண்ட விஜே மகாலட்சுமிக்கு மாத வருமானம் லட்சக்கணக்கில் இருப்பதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நடிகையும் தொகுப்பாளினியான விஜே மகாலட்சுமி கடந்த செப்டம்பர் மாதம் பிரபல தயாரிப்பாளர் ரவீந்தர் என்பவரை திருமணம் செய்துகொண்டார் என்பது தெரிந்ததே. இந்த திருமணம் குறித்து பல சர்ச்சைகள் எழுந்தாலும் ரவீந்தர் மகாலட்சுமி தம்பதிகள் அதையெல்லாம் கண்டுகொள்ளாமல் தலை தீபாவளியை கொண்டாடினார்கள் என்பதும் அவர்கள் ஜோடியாக பல இடங்களுக்கு சென்ற புகைப்படங்கள் வீடியோக்கள் வைரல் ஆனது என்பதும் தெரிந்ததே

இந்த நிலையில் சன் டிவியில் இரண்டு முக்கிய சீரியல்களில் நடித்து வரும் விஜே மகாலட்சுமி தற்போது ஒரு சில திரைப் படங்களிலும் நடிக்க கமிட்டாகி உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தொலைக்காட்சி தொடர் மற்றும் திரைப்படங்கள் மூலம் இவரது மாத வருமானம் மூன்று முதல் நான்கு லட்சம் ரூபாய் வரை இருக்கும் என்று கூறப்படுகிறது. இந்த தகவலை அறிந்த ரசிகர்கள் ஆச்சரியம் அடைந்து வருகின்றனர்.