23 வயசுல அப்படி செய்றதனால என்ன தப்பு: ஜாக்குலின்

  • IndiaGlitz, [Tuesday,July 30 2019]

'கலக்கப்போவது யார்' நிகழ்ச்சியில் விஜே, 'கோலமாவு கோகிலா' படத்தில் நயன்தாராவின் தங்கை என சின்னத்திரை, பெரிய திரையில் பிரபலமானவர் ஜாக்குலின். தற்போது 'தேன்மொழி பிஏ' என்ற தொலைக்காட்சி தொடரில் நடிக்கின்றார். இந்த தொடரை இயக்குனர் பிரான்சிஸ் கதிரவன் என்பவர் இயக்கவுள்ளார். இவர் ஏற்கனவே 'ஆண்டாள் அழகர்' என்ற திரைப்படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

'நிம்க்கி முக்கியா' என்ற இந்தி தொடரின் தமிழ் ரீமேக் சீரியலான இந்த தொடரில் டைட்டில் ரோலில் நாயகியாக நடிக்கின்றார் ஜாக்குலின். இந்த தொடரின் நாயகி கேரக்டர் எதுக்குமே கவலைப்படாம ஜாலியாக சிரிச்சிட்டே இருப்பா. குழந்தைத்தனம், எதையும் சீரியஸா எடுத்துக்காத கேரக்டர்' என்பதால் தான் இந்த தொடரில் நடிக்க ஒப்புக்கொண்டதாக தெரிவித்த ஜாக்குலின், தன்னுடைய தாயாரும் இந்த கேரக்டர் தனக்கு நன்றாக பொருத்தமாக இருக்கும் என்று கூறியதாக தெரிவித்தார்

மேலும் இந்த தொடரில் நடிக்க முதலில் தயக்கம் காட்டியதாகவும், அதன்பின் இயக்குனர் கொடுத்த தைரியம், இந்தி சீரியலை பார்த்தவுடன் ஏற்பட்ட நம்பிக்கைக்கு பின் முழு அளவில் களத்தில் இறங்கிவிட்டதாகவும் ஜாக்குலின் கூறினார்.

இந்த சீரியலின் முதல் எபிசோடிலேயே கல்யாண பெண்ணாக நடிப்பது குறித்து கருத்து தெரிவித்த ஜாக்குலின், 'எனக்கு இப்போது 23 வயது ஆகிறது. இந்த வயசுல கல்யாண பெண்ணா நடிப்பது தப்பு இல்லையே, 35 வயசுல சில நடிகைங்க ஸ்கூல் பொண்ணா நடிக்கிறாங்களே' என்று விளக்கம் அளித்தார். எனக்கு கேரக்டர் பிடித்திருந்தால் பிச்சைக்காரியா நடிக்கக்கூட எந்த தயக்கமும் இல்லை என்று ஜாக்குலின் நம்பிக்கையுடன் தெரிவித்தார்.