வைரலாகும் விஜே சித்ராவின் நீச்சல்குள போட்டோஷூட்!
Send us your feedback to audioarticles@vaarta.com
கொரோனா வைரஸ் ஊரடங்கு நேரத்தில் படப்பிடிப்பு இல்லாமல் இருக்கும் பல நடிகைகள் தங்களுடைய கவர்ச்சியான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை தங்களது சமூக வலைதளங்களில் பதிவு செய்து வருகின்றனர் என்பது தெரிந்ததே
இந்த பட்டியலில் கடந்த சில நாட்களாக தொலைக்காட்சி சீரியல் நடிகைகளும் இறங்கிவிட்டனர். தொலைக்காட்சி நடிகை ஷிவானி நாராயணன் உள்பட பல நடிகைகள் தங்களுடைய கவர்ச்சியான புகைப்படங்களை பதிவு செய்து வெள்ளித்திரைக்கு செல்ல திட்டமிட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் ’பாண்டியன் ஸ்டோர்’ உள்பட ஒருசில சீரியல்களில் நடித்து புகழ்பெற்று மக்கள் மனதில் இடம் பிடித்த நடிகை சித்ராவும், கடந்த சில நாட்களாக தனது வித்தியாசமான படங்களை சமூக வலைத்தளத்தில் பதிவு செய்தார். விஜேவாக தொலைக்காட்சியில் தனது பணியை ஆரம்பித்து அதன் பின்னர், ‘சின்ன பாப்பா பெரிய பாப்பா’ ’சரவணன் மீனாட்சி’ ’பாண்டியன் ஸ்டோர்’ உள்பட பல சீரியல்களில் நடித்து சித்ரா புகழ் பெற்று வருகிறார்
இந்நிலையில் இவர் தற்போது நீச்சல் குளத்தில் நடத்தப்பட்ட ஒரு போட்டோஷூட்டின் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. திரையுலக நடிகைகள் மட்டுமின்றி சின்னத்திரை நடிகைகளும் தற்போது நீச்சல்குள போட்டோ ஷூட்டை ஆரம்பித்து விட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com