எல்லோருடைய வாழ்க்கையிலும் கஷ்டம் கண்டிப்பா வேணும்: விஜே சித்ராவின் லேட்டஸ்ட் வீடியோ!

சின்னத்திரை நடிகை சித்ரா சமீபத்தில் தனியார் ரிசார்ட் ஒன்றில் தற்கொலை செய்து கொண்ட நிலையில் அவரது தற்கொலைக்கு அவரது கணவர் ஹேமந்த் தான் காரணம் என்ற குற்றச்சாட்டின்பேரில் கைது செய்யப்பட்டார். இதுகுறித்த வழக்கு விசாரணை நடந்து வருகிறது.

இந்த நிலையில் சித்ரா நடித்து முடித்துள்ள முதல் மற்றும் கடைசி படமான ’கால்ஸ்’ என்ற திரைப்படத்தின் வீடியோ சமீபத்தில் வெளியாகி உள்ளது. இந்த வீடியோவில் கஷ்டம் எல்லாருக்கும் வரவேண்டுமென்று விஜே சித்ரா பேசும் வசனம் அனைவரையும் கவர்ந்துள்ளது அந்த வசனம் இதோ:

சில பேர் பஸ்ல கஷ்டப்பட்டு போறாங்க, ஆனா நம்ம ஆபீஸ் நமக்கு கேப் கொடுத்திருக்காங்க. இது ஒரு நல்ல விஷயம் தானே. ஒரு விஷயம் சொல்றேன் புரிஞ்சுக்க முயற்சி பண்ணு. ரோட்ல போற வெயில் சுளீர்ன்னு நம்ம மேலே பட்டால் தான் நாம் நிழலை தேடி போவோம். கஷ்டம்ங்கிறது வெயில் மாதிரி, சந்தோஷம் நிழல் மாதிரி. நாம தானே நிழலை தேடி போகணும்.

அந்த நிழல் பெரிய மரமாக இருக்கலாம், இல்ல நம்மள கடந்து போகிற சின்ன மேகமா இருக்கலாம், அதுவும் இல்லன்னா ரோட்டோரத்தில் பூ விக்கிற பாட்டி வச்சிருக்கிற விளம்பர குடையா இருக்கலாம். அது என்னன்னு நாம தான் தேடணும். கஷ்டம் வரலைனா சந்தோஷம்னா என்னன்னே தெரியாம போயிடும்’ என்று சித்ரா பேசும் இந்த வசனத்தின் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

More News

புதுச்சேரி அரசியலில் நடந்தது என்ன? பின்னணியை விளக்கும் அரசியல் பேட்டி!

புதுச்சேரி மாநிலத்தில் அடுத்த சட்டமன்றத் தேர்தலுக்கான தேதி இந்த மாத இறுதியில் அறிவிக்கப்பட இருந்தது.

பந்து ஸ்விங் ஆவதைப் பற்றி கவலைப்பட வேண்டுமா? இந்தியக் கேப்டனின் அசத்தல் பேச்சு!

உலகின் மிகப்பெரிய மைதானமான அகமதாபாத் மொதேரா மைதானத்தில் முதல் சர்வதேசப் போட்டி நாளை நடைபெற இருக்கிறது.

தனுஷின் 'ஜகமே தந்திரம்' படத்தில் குக் வித் கோமாளி பிரபலம்: டீசரில் யாராவது கவனிச்சிங்களா?

சமீபத்தில் தனுஷ் நடித்த 'ஜகமே தந்திரம்' படத்தின் டீசர் வெளியான நிலையில் இந்த டீசரில் குக் வித் கோமாளி பிரபலம் ஒரே ஒரு காட்சியில் இடம் பெற்றுள்ளதை இரசிகர்கள் கவனித்து சமூக வலைதளங்களில் பதிவு செய்து

பிரதமர் மோடிக்கு கமல் கடிதம்: கிண்டல் செய்த பிரபல நடிகரின் மகள்!

தமிழக பிரச்சனைகள் குறித்து அவ்வப்போது மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும் உலகநாயகன் நடிகருமான கமல்ஹாசன் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி வரும் நிலையில் இந்த கடிதங்கள் குறித்து

கோமாவில் இருப்பவர்கள் உடலை விட்டு வெளியே வருவாங்க: 'டெடி' த்ரில் டிரைலர்

தமிழ் திரை உலகின் இளையதலைமுறை நடிகர்களில் ஒருவரான ஆர்யா தற்போது 'டெடி', 'புஷ்பா',  'எனிமி' மற்றும் 'சல்பேட்டா' ஆகிய நான்கு திரைப்படங்களில் நடித்து வருகிறார்