விஜே சித்ரா வழக்கில் கணவர் விடுதலை.. தந்தை எடுத்த அதிரடி முடிவு..!

  • IndiaGlitz, [Saturday,September 28 2024]

சின்னத்திரை நடிகை சித்ரா மர்மமான முறையில் மரணமடைந்த வழக்கில் அவரது கணவர் ஹேம்நாத் நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்ட நிலையில் சித்ராவின் தந்தை எடுத்த அதிரடி முடிவு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சின்னத்திரை சீரியல் நடிகை சித்ரா கடந்த 2020 ஆம் ஆண்டு சென்னை அருகே ஹோட்டல் ஒன்றில் மர்மமான முறையில் மரணம் அடைந்தார். இது குறித்து சித்ராவின் கணவர் ஹேமநாத் உள்பட 7 மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டனர்.

இந்த நிலையில் இந்த வழக்கு திருவள்ளூர் மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில் சமீபத்தில் இந்த வழக்கின் தீர்ப்பில் ஹேமாநாத் விடுதலை செய்யப்படுவதாக உத்தரவிடப்பட்டது.

இந்த நிலையில் சித்ராவின் தந்தை காமராஜ் என்பவர் ஹேம்நாத் விடுதலையை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார். அவருடைய மனுவில், ‘விசாரணை நீதிமன்றம் அரசு தரப்பு சாட்சிகளின் வாக்குமூலங்களை முறையாக விசாரணை செய்யவில்லை என்றும் எனவே ஹேம்நாத் விடுதலையை ரத்து செய்து தீர்ப்பளிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார். இந்த மனு விரைவில் சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வர உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.