close
Choose your channels

ஃபாரின் ஹீரோயின் மாதிரி இருக்கீங்க.. ரம்பாவின் 'அழகிய லைலா' பாட்டுக்கு செம டான்ஸ் ஆடும் விஜே..

Tuesday, June 20, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

'உள்ளத்தை அள்ளித்தா' என்ற திரைப்படத்தில் நடிகை ரம்பா டான்ஸ் ஆடிய 'அழகிய லைலா' என்ற பாடலுக்கு விஜே அஞ்சனா ரங்கன் செம டான்ஸ் ஆடி உள்ள வீடியோ அவரது இன்ஸ்டாகிராமில் வைரல் ஆகி வருகிறது.

சின்னத்திரை உலகில் பல ஆண்டுகளாக பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியவர் அஞ்சனா ரங்கன். குறிப்பாக ’டான்ஸ் ஜோடி டான்ஸ்’ ’ஜூனியர் சூப்பர் சிங்கர்’ ’நட்சத்திர ஜன்னல்’ ’நீங்களும் நாங்களும்’ உட்பட பல நிகழ்ச்சிகளை அவர் தொகுத்து வழங்கி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமின்றி பிரபல நடிகர்களின் திரைப்படங்களின் இசை விழாவையும் இவர் தொகுத்து வழங்கியுள்ளார்.

மேலும் ’கயல்’ என்ற படத்தில் நடித்த சந்திரன் என்பவரை கடந்த 2016 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட அஞ்சனாவுக்கு ஒரு மகன் உள்ளார் என்பதும் அவர் திருமணத்திற்கு பின்னர் கிளாமர் போட்டோஷூட் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பதிவு பக்கத்தில் பதிவு செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இன்ஸ்டாகிராமில் சுமார் ஒரு மில்லியனுக்கும் அதிகமான ஃபாலோயர்களை வைத்துள்ள அஞ்சனா ரங்கன் சற்றுமுன் ’அழகிய லைலா’ பாட்டுக்கு செம டான்ஸ் ஆடி உள்ளார். இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் ’ஃபாரின் ஹீரோயின் மாதிரி இருக்கீங்க’ என்றும் ’உங்களை தமிழ் சினிமா பயன்படுத்த தவறிவிட்டது’ என்றும் கமெண்டில் பதிவு செய்து வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment
Related Videos