அதுக்குள்ள ரெண்டு வருசம் ஆச்சா? விஜே அஞ்சனாவின் ஆச்சரியம்
Send us your feedback to audioarticles@vaarta.com
தொலைக்காட்சி விஜேக்கள் பலர் இருந்தாலும் ஒருசிலர் மட்டும் பார்வையாளர்களின் மனதில் அழுத்தமாக பதிவாகிவிடுவார்கள். அந்த வகையில் செல்ல மொழிபேச்சில் அனைவரையும் கவர்ந்தவர், தனது குறும்புப்பார்வையால் இளைஞர்களை தொலைக்காட்சி முன் கட்டிப்போட்டவர் விஜே அஞ்சனா என்றால் அது மிகையாகாது.
இந்த நிலையில் இன்று விஜே அஞ்சனா தனது இரண்டாவது திருமண நாளை தனது கணவருடன் கொண்டாடி வருகிறார்.கடந்த 2016ஆம் ஆண்டு இதே மார்ச் 10ஆம் தேதிதான் 'கயல்' சந்திரனை கைப்பிடித்தார் அஞ்சனா.
இந்த நிலையில் தனது இரண்டு வருட திருமண வாழ்க்கை குறித்து அவர் தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்தபோது, 'மகிழ்ச்சியாக இரண்டு ஆண்டுகள் கடந்துவிட்டன. மகிழ்ச்சி, சண்டை, என நமக்குள் ஒவ்வொரு நாளும் ஏகப்பட்ட அன்பு. இதேபோல மகிழ்ச்சியான ஆண்டுகள் பல வருடங்கள் வரவேண்டும். மிக அழகான நீண்ட கால வாழ்க்கை நமக்கு இன்னும் இருக்கிறது என்பது எனக்குத் தெரியும். உன்னை அடைந்ததால் மிகவும் ஆசிர்வதிக்கப்பட்டவள் போல உணர்கிறேன். எல்லாவற்றிற்கும் மேலாக உன்னை மிக அதிகமாக நேசிக்கிறேன்' என்று குறிப்பிட்டுள்ளார்.
அஞ்சனாவின் டுவீட்டை பார்த்த பலர் அதுக்குள்ள அஞ்சனாவிற்கு திருமணம் ஆகி இரண்டு வருடம் ஆகிவிட்டதா? என்ற ஆச்சரியத்தை தெரிவித்துள்ளனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Contact at support@indiaglitz.com