அதுக்குள்ள ரெண்டு வருசம் ஆச்சா? விஜே அஞ்சனாவின் ஆச்சரியம்

  • IndiaGlitz, [Saturday,March 10 2018]

தொலைக்காட்சி விஜேக்கள் பலர் இருந்தாலும் ஒருசிலர் மட்டும் பார்வையாளர்களின் மனதில் அழுத்தமாக பதிவாகிவிடுவார்கள். அந்த வகையில் செல்ல மொழிபேச்சில் அனைவரையும் கவர்ந்தவர், தனது குறும்புப்பார்வையால் இளைஞர்களை தொலைக்காட்சி முன் கட்டிப்போட்டவர் விஜே அஞ்சனா என்றால் அது மிகையாகாது.

இந்த நிலையில் இன்று  விஜே அஞ்சனா தனது இரண்டாவது திருமண நாளை தனது கணவருடன் கொண்டாடி வருகிறார்.கடந்த 2016ஆம் ஆண்டு இதே மார்ச் 10ஆம் தேதிதான் 'கயல்' சந்திரனை கைப்பிடித்தார் அஞ்சனா.

இந்த நிலையில் தனது இரண்டு வருட திருமண வாழ்க்கை குறித்து அவர் தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்தபோது, 'மகிழ்ச்சியாக இரண்டு ஆண்டுகள் கடந்துவிட்டன. மகிழ்ச்சி, சண்டை, என நமக்குள் ஒவ்வொரு நாளும் ஏகப்பட்ட அன்பு. இதேபோல மகிழ்ச்சியான ஆண்டுகள் பல வருடங்கள் வரவேண்டும். மிக அழகான நீண்ட கால வாழ்க்கை நமக்கு இன்னும் இருக்கிறது என்பது எனக்குத் தெரியும். உன்னை அடைந்ததால் மிகவும் ஆசிர்வதிக்கப்பட்டவள் போல உணர்கிறேன். எல்லாவற்றிற்கும் மேலாக உன்னை மிக அதிகமாக நேசிக்கிறேன்' என்று குறிப்பிட்டுள்ளார்.

அஞ்சனாவின் டுவீட்டை பார்த்த பலர் அதுக்குள்ள அஞ்சனாவிற்கு திருமணம் ஆகி இரண்டு வருடம் ஆகிவிட்டதா? என்ற ஆச்சரியத்தை தெரிவித்துள்ளனர்.

More News

ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் நிறுவனத்தின் புதிய முயற்சி

கோலிவுட்டின் முன்னணி திரைப்பட தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தற்போது வெப் தொடர் ஒன்றை தயாரிக்க திட்டமிட்டுள்ளது

அறிவும் இதயமும் இல்லாத அசுரன்: காயத்ரி ரகுராம் திட்டியது யாரை தெரியுமா?

காதல் மிரட்டல் என்ற பெயரில் இளம்பெண் அஸ்வினியை அறிவும் இதயமும் இல்லாத அசுரன் கொலை செய்துள்ளான். அஸ்வினி குடும்பத்துக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்” என பதிவு செய்துள்ளார்.

பதில் சொல்லிட்டு போங்கள், ரஜினியை துரத்திய நிருபர்கள்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இமயமலை செல்வதற்காக நேற்று சென்னை விமான நிலையத்திற்கு சென்றார். அப்போது அவரிடம் நிருபர்கள் பேட்டி எடுத்தபோது தன்னுடைய ஆன்மீக பயணம் குறித்த விபரங்களை தெரிவித்தார்.

சிம்புவின் பீப் பாடலை வெளியிட்டதும் அட்மின் தான்: டி.ராஜேந்தர்

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் சிம்பு கம்போஸ் செய்த பீப் பாடல் இணையத்தில் லீக் ஆகி மிகப்பெரிய சர்ச்சையை ஏறபடுத்தியது.

இந்தியாவின் பணக்கார கட்சிகள்: அதிமுகவுக்கு எத்தனையாவது இடம் தெரியுமா?

இந்தியாவில் தடுக்கி விழுந்தால் கூட பத்து கட்சிகள் இருந்தாலும் ஒருசில கட்சிகளே இந்திய அளவிலும் மாநில அளவிலும் புகழ் பெற்று விளங்குகின்றன.