நீட் தேர்வை எதிர்த்து வேலையை ராஜினாமா செய்த அரசுப்பள்ளி ஆசிரியை
Send us your feedback to audioarticles@vaarta.com
நீட் தேர்வை எதிர்த்து அரியலூர் அனிதா தன்னுடைய உயிரையே தியாகம் செய்த நிலையில் அதே நீட் தேர்வை எதிர்த்து விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த ஆசிரியை சபரிமாலா என்பவர் தனது வேலையை ராஜினாமா செய்துள்ளார். மாவட்ட தொடக்கக்கல்வி அதிகாரிக்கு அவர் எழுதிய உருக்கமான கடிதத்தில் "என் வேலையைவிட எனக்கு தேசம் தான் முக்கியம் என்று குறிப்பிட்டுள்ளார்.
ஆசிரியை சபரிமாலா தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாவது:
"நான் கடந்த 2002-ம் ஆண்டு முதல் ஆசிரியராக தமிழகக் கல்வித்துறையில் பணியாற்றிவருகிறேன். மாணவர்களுக்காக எனது வாழ்வையே அர்ப்பணித்து பல மாநில சாதனையாளர்களை உருவாக்கியுள்ளேன். ஏற்றத்தாழ்வற்ற சமூகம் அமைய வேண்டும் என்பதற்காகவே எனது மகனை அரசுப்பள்ளியில் படிக்க வைக்கிறேன்.
இந்நிலையில் மாணவி அனிதாவின் மரணத்தை ஓர் ஆசிரியராகக் கல்வி எழுச்சிகொள்ள வேண்டிய தருணமாக உணர்ந்தேன். ஒரே கல்வி இல்லாமல் ஒரே தேர்வு எப்படி நியாயமாகும் என்ற வேதனையில் எனது வெளிப்பாட்டைத் தன்னெழுச்சியை 6.9.17 அன்று காலை 9.30 மணிக்கு எனது பள்ளிக்கு வெளியே உண்ணாவிரதம் இருக்கத் தொடங்கினேன். அனுமதியில்லாமல் தொடரக் கூடாது என்றதும் 1.30 மணிக்கு அங்கிருந்து கிளம்பி காவல்துறையிடம் அனுமதி கேட்டேன். அவர்கள் அனுமதி வழங்கவில்லை.
ஒரு ஜனநாயக நாட்டில் ஒரு ஆசிரியர் கல்வி பிரச்னைக்காகக் குரல் எழுப்பியது குற்றம் என்று சொல்கிறது சட்டம். சம்பளத்துக்காக ஆசிரியர்கள் போராடும்போது சமத்துவம் கொண்ட கல்விக்காக ஓர் ஆசிரியர் போராடக் கூடாது என்பது மிகுந்த வேதனையைத் தருகிறது. என் வேலையைவிட எனக்கு தேசம் முக்கியம் என்பதால் என் ஆசிரியர் பணியை 7.9.2017 முதல் வருத்தத்தோடு ராஜினாமா செய்கிறேன்"
இவ்வாறு சபரிமாலா தனது ராஜினாமா கடிதத்தில் தெரிவித்துள்ளார். ஏற்கனவே ஒருபக்கம் மாணவர்கள் உணர்ச்சிவசத்துடன் போராடி வரும் நிலையில் ஆசிரியை ஒருவர் ராஜினாமா செய்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Contact at support@indiaglitz.com