மீம்ஸ் கிரியேட்டர்களின் தலைவர்: வடிவேலுவை பாராட்டிய பிரபல காமெடி நடிகர்
Send us your feedback to audioarticles@vaarta.com
கடந்த சில ஆண்டுகளாக சமூக வலைதளங்களில் மீம்ஸ்கள் வெளிவந்து கொண்டிருப்பது தெரிந்ததே. நாட்டில் எந்த ஒரு சம்பவம் நடந்தாலும் அந்த சம்பவத்தை மையமாக வைத்து ஊடகங்கள் சீரியஸாக செய்திகளை வெளியிட்டு வந்தால், மீம்ஸ் கிரியேட்டர்ஸ்கள் அதே சம்பவத்தை வைத்து மீம்ஸ் கிரியேட் செய்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். இதில் 90%க்கும் மேல் மீம்ஸ் கிரியேட்டர்கள் பயன்படுத்துவது வடிவேலு நடித்த காட்சிகளின் வசனம் மற்றும் அவரது உடல் மொழியை தான் என்பது அனைவரும் அறிந்த உண்மை
அந்த வகையில் வடிவேலு இல்லாமல் மீம்ஸ்களும் இல்லை, மீம்ஸ் கிரியேட்டர்ஸ்களும் இல்லை என்ற நிலை தான் உள்ளது. அந்த அளவுக்கு மீம்ஸ் கிரியேட்டர்ஸ்களுக்கு வடிவேலு கண்டெண்ட் கொடுத்து வருகிறார். இந்த நிலையில் மீம்ஸ் கிரியேட்டர்ஸ்களின் தலைவர் என்று நடிகர் வடிவேலுவை குறிப்பிட்ட நெட்டிசன் ஒருவர், இதுகுறித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் வடிவேலு முகத்தை வரைந்து அதில் விதவிதமான கெட்டப்புகளில் அவர் மாறுவது போன்று உருவாக்கப்பட்டுள்ளது
இந்த வீடியோவை பார்த்த பிரபல காமெடி நடிகர் விவேக் அவர்கள் ’உண்மை. வடிவேலுவைப் போல் மீம் கிரியேட்டர்க்கு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியவர் எவரும் இல்லை! வாழ்க அவர் நகைச்சுவைப் பணி!! என்று தெரிவித்துள்ளார். காமெடி நடிகர் ஒருவரை இன்னொரு சக காமெடி நடிகர் மனம் திறந்து வாழ்த்தியுள்ளது கோலிவுட் திரையுலகில் ஆரோக்கியமானதாக பார்க்கப்படுகிறது
உண்மை. வடிவேலுவைப் போல் மீம் கிரியேட்டர்க்கு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியவர் எவரும் இல்லை! வாழ்க அவர் நகைச்சுவைப் பணி!! https://t.co/BaKsmsOzuH
— Vivekh actor (@Actor_Vivek) May 29, 2020
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com