முதலமைச்சர் ஓபிஎஸ் உடன் பிரபல நடிகர் திடீர் சந்திப்பு

  • IndiaGlitz, [Thursday,December 15 2016]

பிரபல நகைச்சுவை நடிகர் விவேக் இன்று தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அவரகளை திடீரென சந்தித்துள்ளார்.

இந்த சந்திப்பின்போது சமீபத்தில் சென்னையை வாரி சுருட்டிய வர்தா புயலால் விழுந்த மரங்கள் குறித்தும் அதன் நிவாரண பணி குறித்தும் முதல்வருடன் பேசியதாக விவேக் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

மேலும் நம் நாட்டிற்கு வெளிநாட்டு மரங்கள் பொருந்தாதவை என்றும் இந்த புயலில் பெரும்பாலும் வெளிநாட்டு மர வகைகளே வேறோடு சாய்ந்துள்ளது என்றும் குறிப்பிட்ட விவேக், நம் நாட்டின் மண்ணுக்கேற்ற மா, பலா, அரச மரங்களை அதிகம் நட வேண்டும்' என்று கூறினார். ஆந்திராவின் ராஜமுந்திரியிலிருந்து மரங்களை பெயர்த்து எடுத்து வந்து, சென்னையில் நடவு செய்ய வேண்டும் என்று, முதல்வரிடம் தான் கோரிக்கை வைத்துள்ளதாகவும் தன்னுடைய கோரிக்கை குறித்து பரிசீலிப்பதாக முதல்வர் கூறியதாகவும் அவர் தெரிவித்தார்.

ஏற்கனவே விவேக் தனது சமூக வலைத்தளத்தில் மரங்கள் வேறோடு வீழ்ந்தது குறித்து கவலையுடன் பல பதிவுகள் செய்துள்ளார். அவர் செய்த பதிவுகள் சில:

நிழல் கொடுத்து, ஆக்சிஜன் கொடுத்து, மலர் கொடுத்து, பறவைக்கு இடம் கொடுத்து, கனி கொடுத்து, மழை கொடுத்து, இன்று உயிரையும் கொடுத்துவிட்டான் இந்த நண்பன்

பெரும் ஆல மரங்களையே பிடிங்கி எறிந்திருக்கும் வார்தா, உன்னோடு எனக்கு War தான்

அரசன் போல் நின்றிநுத ஆலம்,
தரிசாகி வீழ்ந்ததென்ன கோலம்

More News

கூகுளின் டாப்-10ல் இடம்பிடித்த ரஜினியின் 'கபாலி'

2016ஆம் ஆண்டு முடிய இன்னும் 15 நாட்களே உள்ள நிலையில் இந்தியாவில் கூகுள் தேடியந்திரத்தில் அதிகம் தேடப்பட்ட டாப் 10 வார்த்தைகள் குறித்த தகவலை கூகுள் வெளியிட்டுள்ளது.

நான் காணாமல் போகவில்லை - ஜெ.உறவினர் தீபா

மறைந்த முதல்வர் ஜெ.ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா ஜெயகுமாரைக் காணவில்லை என்று பெங்களூருவைச் சேர்ந்த அம்ருதா நேற்று ஊடகங்களுக்கு பேட்டி கொடுத்திருந்தார்

'சரோஜா' தயாரிப்பாளருக்கு வெங்கட்பிரபுவின் அடுத்த படம்

வெங்கட்பிரபு இயக்கத்தில் சமீபத்தில் வெளியான 'சென்னை 28 II' திரைப்படம் பணத்தட்டுப்பாடு, வர்தா புயல் போன்ற பிரச்சனைகளையும் மீறி நல்ல வசூல் பெற்றுள்ளது.

அதிமுகவின் அடுத்த பொதுச் செயலாளர் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு

முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதாவின் மறைவையடுத்து விரைவில் நடைபெற இருக்கும் அஇஅதிமுக பொதுக்குழு கூட்டத்தில் கட்சியின் அடுத்த பொதுச் செயலாளராக கட்சியினரால் ’சின்னம்மா’ என்று அழைக்கப்படும் வி.கே. சசிகலா

வர்தா புயலால் ஏற்பட்ட ஒரே நன்மை

கடந்த திங்கள் அன்று வர்தா புயல் ஏற்படுத்திய பாதிப்பால் சென்னை மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் ஆயிரக்கணக்கான மரங்கள் வேறோடு வீழ்ந்தது.