ஒரு மருத்துவருக்கே இந்த நிலையா? நடிகர் விவேக்கின் உருக்கமான வீடியோ
- IndiaGlitz, [Monday,April 20 2020]
கொரோனாவால் இறந்தது ஒரு மருத்துவராக கூட இருந்தால் கூட அவருடைய உடலை அடக்கம் செய்ய முடியாத சூழ்நிலைக்கு உள்ளாகி ரொம்ப வருத்தமாக உள்ளது. சைமன் என்ற நியூரோ சர்ஜன், இன்று கொரோனாவால் உயிரிழந்தார். அவர் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்ததால் தான் அவருக்கு இந்த நிலை ஏற்பட்டுள்ளது. அவருடைய உடலை கீழ்ப்பாக்கம் மயானத்திலும் அண்ணா நகர் மயானத்திலும் அடக்கம் செய்ய முடியாதபடி மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்
சில மருத்துவ உண்மைகள் பொதுமக்கள் புரியவில்லை என்று நினைக்கிறேன். கொரோனா வைரஸ் இறந்தவர்களின் உடலில் இருக்காது என்று உலக சுகாதார நிறுவனமே தெரிவித்துள்ளது. இதை நான் பல மருத்துவர்களிடம் ஆலோசனை செய்து தான் கூறுகின்றேன். கொரோனாவால் இறந்தவர்களின் உடலை எரித்தாலும் புதைத்தாலும் யாருக்கும் தொற்று பரவாது என்பதை உறுதி செய்த பின்னரே நான் சொல்கிறேன்
சாதாரண மனிதர்களையே நாம் அவ்வாறு செய்யக் கூடாது அப்படி இருக்கையில் நடமாடும் தெய்வங்களாக இருக்கும் மருத்துவர்களின் உடலைக்கூட அடக்கம் செய்யவிடாமல் தடுப்பது என்பது ரொம்ப தவறானது. மருத்துவர்களை உயிரோடு இருக்கும் போது கொண்டாட முடியவில்லை என்றாலும் இறக்கும் போது அவர்களை அவமானப்படுத்தாமல் இருக்க வேண்டும். அவருக்காக நாம் பிரார்த்தனை செய்வோம். அவரது குடும்பத்தினர்களுக்காகவும் பிரார்த்தனை செய்வோம். மனிதநேயத்தை காப்போம்’ என்று நடிகர் விவேக் வீடியோ ஒன்றில் கூறியுள்ளார்.