யாரோ வெளி நாட்டவர் எழுதிய கட்டுரை தேவையா? வைரமுத்து விவகாரம் குறித்து விவேக்

  • IndiaGlitz, [Thursday,January 11 2018]

சமீபத்தில் ஆண்டாள் குறித்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட கவியரசு வைரமுத்து ஆண்டாள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து ஒன்றை கூறினார். இந்த கருத்துக்கு இந்து மத ஆதரவாளர்களும், ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியை சேர்ந்தவர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மேலும் இந்த பிரச்சனை தீவிரமானதை அடுத்து வெளிநாட்டு ஆய்வாளர் ஒருவர் ஆண்டாள் குறித்து கூறிய கருத்தை தான் மேற்கோள் காட்டியதாகவும், யாருடைய மனதையாவது தன்னுடைய கருத்து புண்புடுத்தியிருந்தால் வருத்தம் தெரிவித்து கொள்வதாகவும் வைரமுத்து தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்தார்

இருப்பினும் வைரமுத்துவுக்கு எதிராக போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள்  நடந்து வருகிறது. குறிப்பாக ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் வைரமுத்து நேரடியாக வந்து மன்னிப்பு கேட்கும் வரை போராட்டம் தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இந்த பிரச்சனை குறித்து கருத்து கூறியுள்ள நடிகர் விவேக், 'அனைத்து மத ஆன்மீக உணர்வுகளையும் நாம் மதிக்க வேண்டும். தாயார் ஆண்டாள் இறையருள் பெற்ற கவி. ஆழ்வார்களில் ஒருவராகப் போற்றப்படுபவர். யாரோ வெளி நாட்டில் எழுதிய கட்டுரை தேவையற்றது. கவிப்பேரரசு மன்னிப்புக் கேட்பதும்; அந்தப் பெருங்கவியை மன்னித்தலும் பண்பாடு' என்று கூறியுள்ளார்.

More News

ரசிகர்களுக்கு த்ரிஷா தரும் பொங்கல் விருந்து

இந்த ஆண்டு பொங்கல் தினத்தில் த்ரிஷாவின் படம் எதுவும் வெளிவரவில்லை எனினும், தனது ரசிகர்களுக்கு ஏமாற்றம் ஏற்படாத வகையில் அவர் நடித்த 'மோகினி' படத்தின் பாடல்கள் பொங்கல் விருந்தாக வெளிவரவுள்ளது.

என்னை நானே புதுப்பித்து கொண்டேன்: தானா சேர்ந்த கூட்டம்' பட விழாவில் சூர்யா

'தானா சேர்ந்த கூட்டம்' நாளை உலகம் முழுவதும் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் வெளியாகவுள்ள நிலையில் நேற்று இந்த படத்தின் சிறப்பு விழா ஒன்று சென்னையில் நடந்தது.

சீமானுக்கு பதிலளித்த ராஜபக்சே மகன்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கடந்த மாதம் 31ஆம் தேதி அரசியலுக்கு வருவதை உறுதி செய்ததும் அவருக்கு தமிழக, இந்திய தலைவர்கள் மட்டுமின்றி உலகத்தலைவர்களும் வாழ்த்து தெரிவித்தனர்.

கேரள ரசிகர்களுடன் 'சொடக்கு' ஆட்டம் போட்ட சூர்யா

சூர்யா, கீர்த்தி சுரேஷ் நடிப்பில் விக்னேஷ்சிவன் இயக்கத்தில் அனிருத் இசையில் உருவான 'தானா சேர்ந்த கூட்டம்' திரைப்படம் நாளை மறுநாள் பிரமாண்டமாக உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது.

கார்த்திக் நரேனின் 3வது படம் குறித்த அறிவிப்பு

'துருவங்கள் 16' படத்தின் மூலம் கோலிவுட்டின் கவனத்தை தனது பக்கம் திருப்பியவர் 22 வயது இளைஞர் கார்த்திக் நரேன். இந்த படம் பெரிய புரமோஷன் இல்லாமல் சூப்பர் ஹிட் ஆகியது.