யாரோ வெளி நாட்டவர் எழுதிய கட்டுரை தேவையா? வைரமுத்து விவகாரம் குறித்து விவேக்
- IndiaGlitz, [Thursday,January 11 2018]
சமீபத்தில் ஆண்டாள் குறித்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட கவியரசு வைரமுத்து ஆண்டாள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து ஒன்றை கூறினார். இந்த கருத்துக்கு இந்து மத ஆதரவாளர்களும், ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியை சேர்ந்தவர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மேலும் இந்த பிரச்சனை தீவிரமானதை அடுத்து வெளிநாட்டு ஆய்வாளர் ஒருவர் ஆண்டாள் குறித்து கூறிய கருத்தை தான் மேற்கோள் காட்டியதாகவும், யாருடைய மனதையாவது தன்னுடைய கருத்து புண்புடுத்தியிருந்தால் வருத்தம் தெரிவித்து கொள்வதாகவும் வைரமுத்து தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்தார்
இருப்பினும் வைரமுத்துவுக்கு எதிராக போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் நடந்து வருகிறது. குறிப்பாக ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் வைரமுத்து நேரடியாக வந்து மன்னிப்பு கேட்கும் வரை போராட்டம் தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இந்த பிரச்சனை குறித்து கருத்து கூறியுள்ள நடிகர் விவேக், 'அனைத்து மத ஆன்மீக உணர்வுகளையும் நாம் மதிக்க வேண்டும். தாயார் ஆண்டாள் இறையருள் பெற்ற கவி. ஆழ்வார்களில் ஒருவராகப் போற்றப்படுபவர். யாரோ வெளி நாட்டில் எழுதிய கட்டுரை தேவையற்றது. கவிப்பேரரசு மன்னிப்புக் கேட்பதும்; அந்தப் பெருங்கவியை மன்னித்தலும் பண்பாடு' என்று கூறியுள்ளார்.