சில நாட்களுக்கு இவற்றுக்கெல்லாம் ஓய்வு கொடுங்கள்: விவேக் வேண்டுகோள்

  • IndiaGlitz, [Wednesday,April 04 2018]

தமிழகத்தில் தற்போது காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் ஸ்டெர்லைட் பிரச்சனைகள் கொழுந்துவிட்டு எரிந்து வருகின்றன. மக்கள் உணர்ச்சி பெருக்குடன் தெருவில் இறங்கி போராட ஆரம்பித்துவிட்டதால் மத்திய அரசு பெரும் கலக்கத்தில் உள்ளது. அதே சமயம் கர்நாடக தேர்தல் காரணமாக காவிரி விஷயத்தில் முடிவெடுக்க முடியாமல் திணறி வருகின்றது.

இந்த நிலையில் நடிகர் விவேக், காவிரி மற்றும் ஸ்டெர்லைட் பிரச்சனைக்காக சமூக வலைத்தளத்தில் தனது கருத்தை தெரிவித்துள்ளார். கட் அவுட் பாலாபிஷேகம், தனி மனித துதி, கிரிக்கெட், சினிமா மோகம் எல்லாவற்றுக்கும் கொஞ்சம் ஓய்வு கொடுக்கலாமே. மேலும் காவிரியும், தூத்துக்குடியும் நம் வாழ்வாதாரப் போராட்டம். இளைஞர்களின் வலுவான போராட்டத்தை சார்ந்தே வெற்றி இருக்கிறது, முடிவு செய்யுங்கள் என்று கூறியுள்ளார்.

அதேபோல் ஸ்டெர்லைட் குறித்து அவர் அரசுக்கு வைக்கும் கோரிக்கையாக 'சில பிரச்சனைகளை அரசு மூளை கொண்டு யோசிக்காமல் , இருதயத்தால் யோசித்தால்... தீர்வு கிடைக்கும். இதைத் தான் விவேகானந்தர் கூறினார்' என்றும் நடிகர் விவேக் கூறியுள்ளார்.

More News

ஐபிஎல் தொடக்க விழாவில் பிரபல தமிழ் நடிகை

ஒவ்வொரு ஆண்டும் நடைபெற்று வரும் ஐபிஎல் கிரிக்கெட் திருவிழாவின் ஹைலைட்டே போட்டியின் தொடக்க விழாவும் இறுதி விழாவும் தான் என்பதும்

2.0 படத்தில் ஐஸ்வர்யாராய் நடித்துள்ளாரா?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் ஷங்கர் இயக்கியுள்ள '2.0' திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது கிராபிக்ஸ் பணிகள் உலகின் பல நாடுகளில் நடைபெற்று வருகிறது

காவிரிக்காக ஐபிஎல் போட்டியை தடை செய்யலாமா?: ஆதரவும் எதிர்ப்பும்

காவிரி பிரச்சனை கொழுந்துவிட்டு எரிந்து கொண்டிருக்கும்போது ஐபிஎல் போட்டி ஒரு கேடா? என்றும், சென்னையில் நடைபெறும் ஐபிஎல் போட்டியை தமிழக அரசு ரத்து செய்ய வேண்டும்

ஐபிஎல் போட்டியை நடத்தினால் வீரர்களை சிறைபிடிப்போம்: தமிழக எம்.எல்.ஏ

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படும் வரை ஐபிஎல் போட்டியை நடத்தவிடமாட்டோம் என்றும் மீறி நடத்தினால் கிரிக்கெட் வீரர்களை சிறைபிடிப்போம் என்று மு.தமீமுன் அன்சாரி கூறியுள்ளார்.

திருச்சியில் இறங்கியது கமல் செய்த முதல் மனிதாபிமான செயல்

கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியின் பொதுக்கூட்டம் இன்று திருச்சியில் நடைபெறவுள்ளதை அடுத்து நேற்று அவர் சென்னையில் இருந்து ரயில் மூலம் திருச்சி சென்றார்.