இரு இமயங்களை சமாளிப்பாரா ரஜினி? விவேக் கூறியதன் உள்ளர்த்தம் என்ன?
- IndiaGlitz, [Tuesday,March 06 2018]
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நேற்று சென்னை தனியார் பல்கலைக்கழகம் ஒன்றில் எம்ஜிஆர் சிலையை திறந்து வைத்துவிட்டு பேசிய நீண்ட உரை தமிழக அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு முன்னர் ரஜினிகாந்த் எந்த மேடையிலும் இவ்வளவு கோர்வையாக, தெளிவாக தடுமாற்றம் இல்லாமல் பேசியதில்லை. அதிலும் குறிப்பாக தமிழகத்தில் ஒரு நல்ல தலைவர் இல்லை, வெற்றிடம் ஏற்பட்டுள்ளது என்று அவர் அழுத்தமாக கூறியது அரசியல் தலைவர்களை ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் ரஜினியின் பேச்சு குறித்து எதிர்ப்பும், ஆதரவும் மாறி மாறி ஏற்பட்டுள்ள நிலையில் நடிகர் விவேக் தனது சமூக வலைத்தளத்தில் இதுகுறித்து கூறியதாவது: ரஜினி சாரின் பேச்சு வெளிப்படையாக இருந்தது. மாணவர்களுக்கு அறிவுரை, எம்ஜிஆர் புகழாரம்! இவை உண்மையாக இருந்தது. இருப்பினும் அதிமுக திமுக எனும் இரு இமயங்கள் எதிரில்! பார்போம். மக்களே நீதிபதிகள்! காலம் கலாம் போல! நீதி வெல்லும்!
விவேக்கின் இந்த டுவீட்டில் 'மக்களே நீதிபதிகள் என்றும், கலாம் போல என்றும் கூறியது 'மக்கள் நீதி மய்யத்தையும், கலாம் இல்லத்தில் இருந்து கமல் அரசியல் கட்சியை தொடங்கியதையும் மறைமுகமாக குறிப்பாதாகவும், அவரது டுவிட்டில் ஒருசிலர் கமெண்ட் பதிவு செய்துள்ளனர். எனவே விவேக்கின் இந்த டுவீட் ரஜினிக்கு ஆதரவா? கமலுக்கு ஆதரவா? என்ற குழப்பம் ஏற்பட்டுள்ளதாக கருதப்படுகிறது.