அறிவியல் வளர்ந்த அளவு இதயம் வளரவில்லையே! நடிகர் விவேக் வேதனை

  • IndiaGlitz, [Saturday,June 16 2018]

மகாராஷ்டிரா மாநிலத்தில் உயர் சாதியினருக்கு சொந்தமான கிணற்றில் குளித்த தலித் சிறுவர்கள் மீது நடத்தப்பட்ட கொடூர தாக்குதல் குறித்த வீடியோ ஒன்று நேற்று சமூக வலைத்தளங்களில் பரவி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி உள்பட பல அரசியல்வாதிகள், சமூக நல ஆர்வலர்கள் ஆகியோர் இந்த் சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்தனர்.

இந்த நிலையில் இந்த சம்பவத்திற்கு நடிகர் விவேக் தனது சமூக வலைத்தளத்தில் வருத்தம் கலந்த கண்டனத்தை தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: மராட்டியத்தில் தலித் சிறுவர்களுக்கு நடந்த கொடுமை, வேதனை. தேசத்தின் வெட்கம். நாம் அனைவரும் முதலில் மனிதர்கள்; சகோதரர்கள். பின்பு இந்தியர்கள். அறிவியல் வளர்ந்த அளவு இதயம் வளரவில்லையே! என்று கூறியுள்ளார்.

நடிகர் விவேக்கின் இந்த டுவீட்டை சமூக வலைத்தள பயனாளிகள் பலர் பாராட்டி வருகின்றனர். இருப்பினும் இதேபோன்று பல கொடுமைகள் தமிழகத்தில் நடைபெற்றபோது விவேக் குரல் கொடுக்காதது ஏன் என்றும் சிலர் கேள்வி எழுப்பியுள்ளனர்.

More News

அடுத்த கட்டத்திற்கு சென்ற 'செக்க சிவந்த வானம்'

பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் அரவிந்தசாமி, சிம்பு, விஜய்சேதுபதி, அருண்விஜய் ஆகிய நான்கு ஹீரோக்கள் முக்கிய வேடத்தில் நடித்துள்ள திரைப்படம் 'செக்க சிவந்த வானம்'.

தனுஷின் 'மாரி 2' படத்தில் இணைந்த மேலும் ஒரு நடிகை

தனுஷ் நடிப்பில் இயக்குனர் பாலாஜி மோகன் இயக்கி வரும் 'மாரி 2' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் சாய்பல்லவி மற்றும் வரலட்சுமி சரத்குமார்

தண்ணீர் திறந்துவிட்ட கர்நாடகத்திற்கு நன்றி கூறிய கமல்

நடிகரும் அரசியல் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் கடந்த வாரம் பெங்களூர் சென்று கர்நாடக முதல்வரை சந்தித்து காவிரி பிரச்சனை குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

3500 ஒளியாண்டு தொலைவிற்கு செல்லும் ஸ்டீபன் ஹாக்கிங் குரல்

இங்கிலாந்து நாட்டின் பிரபல இயற்பியல் விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங் அவர்கள் கடந்த மார்ச் மாதம் 14ஆம் தேதி லண்டனில் உள்ள அவரது இல்லத்தில் காலமானர் என்பது தெரிந்ததே.

பேரறிவாளனை கருணைக்கொலை செய்துவிடுங்கள்: அற்புதம்மாள் உருக்கம்

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக பேரறிவாளன் உள்பட 7 பேர் சிறைத்தண்டனை அனுபவித்து வருகின்றனர்.