பஜாஜ் ஆயிலாக மாறிய பஜ்ஜி ஆயில்: நிஜமானது விவேக் காமெடி!
Send us your feedback to audioarticles@vaarta.com
நடிகர் விவேக் ஒரு படத்தில் பஜ்ஜியில் உள்ள எண்ணெயை பிழிந்து வாகனங்களுக்கு செலுத்தும் காமெடி காட்சி ஒன்றில் நடித்து இருப்பார். அந்த காமெடி காட்சி கிட்டத்தட்ட இன்று உண்மையாகியுள்ளது
சுற்றுச் சூழலுக்கும் உடல் நலனுக்கும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய ஒரு முறை பயன்படுத்திய சமையல் எண்ணெய் மறுசுழற்சி முறையில் பயோடீசல் ஆக மாற்றும் திட்டம் தென்காசியில் தொடங்கப்பட்டுள்ளது
தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவரால் தொடங்கப்பட்ட இந்த திட்டத்தில் ஒரு முறை பயன்படுத்திய ஆயிலை கொடுத்தால் அது பயோடீசல் ஆக மாற்றப்படுகிறது என்றும், இதன் மூலம் ஒருமுறை ஆயிலை பயன்படுத்துபவர்களுக்கு ஒரு குறிப்பிட்ட வருமானம் கிடைப்பது மட்டுமின்றி பயோடீசல் உற்பத்தி அதிகரிப்பதால் நாட்டின் அன்னிய செலவாணியும் குறைகிறது என்பது குறிப்பிடதக்கது
அதுமட்டுமின்றி ஒருசிலர் பயன்படுத்திய சமையல் எண்ணெய்களை நீர் ஆதாரங்களில் கொட்டுவதால் சுற்றுச்சூழலும் பாதிக்கப்படுகிறது. இந்த திட்டத்தின் மூலம் சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படுகிறது என்பது மட்டுமின்றி ஒருமுறை பயன்படுத்திய எண்ணெய்க்கு வருமானமும் கிடைப்பதால் இந்த திட்டத்திற்கு வியாபாரிகள் பெரும் வரவேற்பை அளித்துள்ளனர்
இதுகுறித்து நடிகர் விவேக் தனது டுவிட்டர் தளத்தில், ‘பஜ்ஜி ஆயிலை பஜாஜ் ஆயிலா மாத்திட்டேண்டா என்று அன்று செய்த காமடி.. இப்போது மீம்சில்’ என்று குறிப்பிட்டுள்ளார். அன்று விவேக் நடித்த காமெடி காட்சி இன்று நிஜமாகியுள்ளது
பஜ்ஜி ஆயிலை பஜாஜ் ஆயிலா மாத்திட்டேண்டா என்று அன்று செய்த காமடி..இப்போது மீம்சில் ....???? pic.twitter.com/SfHpLOylqa
— Vivekh actor (@Actor_Vivek) November 28, 2020
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com