இறந்து கொண்டிருக்கும் இரண்டு விஷயங்கள்: அரசு தீர்வு காண விவேக் வேண்டுகோள்
- IndiaGlitz, [Friday,March 16 2018]
தமிழகத்தில் விவசாயம் மற்றும் சினிமா ஆகிய இரண்டு இறந்து கொண்டிருப்பதாகவும் இந்த இரண்டையும் அரசு தலையிட்டு காப்பாற்ற வேண்டும் என்றும் நடிகர் விவேக் தனது சமூக வலைத்தளம் மூலம் வேண்டுகோள் விடுத்துள்ளார்
இதுகுறித்து அவர் தனது சமூக வலைத்தளத்தில் கூறியிருப்பதாவது: தமிழ் நாட்டில் இறந்து கொண்டிருக்கும் 2 விஷயங்கள். 1. விவசாயம் 2. சினிமா. அதை அழிப்பது வரண்ட நீர் நிலை, காணாமல் போன ஆறுகள், மரங்கள் ,மீத்தேன் போன்ற திட்டங்கள். இதை அழிப்பது வரைமுறை அற்ற வெளியீடு, fdfs இணைய விமர்சனங்கள், கட்டண உயர்வு, சம்பள உயர்வு. அரசு தலையிடாமல் தீர்வு இல்லை' என்று கூறியுள்ளார்
ஒரு பக்கம் ஜிஎஸ்டி உள்பட 4 கோரிக்கைகளுக்காக சென்னை தவிர தமிழகத்தின் அனைத்து திரையரங்குகளும் இன்று முதல் மூடப்பட்டுள்ளது. இன்னொரு பக்கம் புதிய வெளியீடு இல்லை, படப்பிடிப்பு, போஸ்ட் புரடொக்சன்ஸ் உள்பட எந்த வேலையும் இல்லை என்று தயாரிப்பாளர் சங்கம் வேலைநிறுத்தம் செய்து வருகிறது. இதற்கு அரசு தலையிடாமல் தீர்வு இல்லை என்பதையே விவேக்கின் டுவீட் சுட்டிக்காட்டியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.