இயக்குனர் அவதாரம் எடுக்கும் பிரபல காமெடி நடிகர்

  • IndiaGlitz, [Saturday,April 13 2019]

நடிகர் விவேக் விரைவில் ஒரு திரைப்படத்தை இயக்கவிருப்பதாகவும் இதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்றும் செய்திகள் வெளிவந்துள்ளது

சமீபத்தில் நடிகர் விவேக் அளித்த பேட்டியில் தன்னுடைய திரைக்கதை எழுதும் திறனை எழுத்தாளர் சுஜாதா ஒருமுறை பாராட்டியுள்ளதாகவும், அதேபோல் 'அலைபாயுதே' படத்தின் படப்பிடிப்பின்போதே தன்னை ஒரு படம் இயக்குமாறு இயக்குனர் மணிரத்னம் அறிவுரை கூறியதாகவும் கூறியுள்ளார்.

எனவே தற்போது ஒரு படத்தின் ஸ்க்ரிப்டை தயார் செய்து வருவதாகவும் விரைவில் தான் இயக்கும் முதல் படம் குறித்த அறிவிப்பை வெளியிடவிருப்பதாகவும் விவேக் அந்த பேட்டியில் கூறியுள்ளார்.

இந்த நிலையில் விவேக் முக்கிய வேடத்தில் நடித்த 'வெள்ளை பூக்கள்' திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது