நதிகள் இணைப்பிற்காக விவேக் எழுதிய 'ஆலுமா டோலுமா' பாடல்
Send us your feedback to audioarticles@vaarta.com
நதிகள் இணைப்பு குறித்து தற்போது பொதுமக்களிடையே விழிப்புணர்ச்சி அதிகமாகி வரும் நிலையில் திரையுலக பிரமுகர்களும் நதிகள் இணைப்பிற்கு சமீபகாலமாக குரல் கொடுத்து வருகின்றனர். நேற்று கூட நடிகர் ரஜினிகாந்த் குரல் கொடுத்ததை பார்த்தோம்
இந்த நிலையில் நகைச்சுவை நடிகர் விவேக், அஜித்தின் 'வேதாளம்' படத்தில் இடம்பெற்ற 'ஆலுமா டோலுமா' பாடலின் மெட்டில் நதிகள் இணைப்பு குறித்த பாடல் ஒன்றை எழுதி பாடியுள்ளார். அந்த பாடல் இதோ:
ஆறுமா ஆறுமா ஆறுபோல யாரும்மா
ஆறெல்லாம் காய்ஞ்சு போனா நமக்கு ஏது சோறுமா?
ஊறுமா ஊறுமா கிணத்தில் தண்ணி ஊறுமா?
ஏரியும் குளங்களும் தான் எப்பவாச்சும் நிரம்புமா?
மிரட்டினா உருட்டினா மேகம் மழை பொய்யுமா?
மரத்தெல்லாம் வெட்டிப்புட்டா நம்மல வைச்சு செய்யுமா?
கங்கையில் முங்கினா பாவமெல்லாம் தொலையுமா?
கங்கையே தொலைஞ்சிட்டா நீயும் எங்க போவம்மா?
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Contact at support@indiaglitz.com