வெற்றிடம் குறித்து நடிகர் விவேக்கின் நகைச்சுவை பதில்
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெற்றிடம் குறித்த கருத்து பரவலாக பேசப்பட்டு வருகிறது. ரஜினிகாந்த் ஆரம்பித்த இந்த வெற்றிடம் குறித்த கருத்தை சிலர் ஆதரிக்கவும் சிலர் எதிர்ப்பு தெரிவித்தும் வருகின்றார்கள். வெற்றிடத்தை ஸ்டாலின் நிரப்பிவிட்டார் என்று திமுகவினரும், எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் இருப்பதால் வெற்றிடம் இல்லை என்று அதிமுகவினர்களும் கூறி வருகின்றன. பாஜக உள்ளிட்ட ஒரு சில கட்சிகள் மட்டும் வெற்றிடம் இருப்பதாக தெரிவித்து வருகின்றனர்
இந்த நிலையில் இன்று நடிகர் நகைச்சுவை நடிகர் விவேக் தனது பிறந்த நாளை கொண்டாடினார். இதனை அடுத்து அவர் ஊட்டியில் உள்ள பள்ளி ஒன்றில் பிளாஸ்டிக் குறித்த விழிப்புணர்வு குறித்த உரையை ஆற்றினார். அதன் பின்னர் மரங்கள் நடுவது உள்பட பல சமூக சேவைகளை இன்று முழுவதும் அவர் தனது பிறந்தநாளில் செய்தார்
இதனை அடுத்து செய்தியாளர்களை சந்தித்த போது ’தமிழகத்தில் வெற்றிடம் இருப்பது குறித்து உங்கள் கருத்து என்ன? என்று கேட்டதற்கு ’இத்தனை பேர் நாம் நிற்கிறோம். இங்கே எங்கே இருக்கிறது வெற்றிடம்? என்று நகைச்சுவையாக பதில் அளித்துவிட்டு, தயவு செய்து என்னிடம் என்ன கேள்வி கேட்க வேண்டுமோ அந்த கேள்வியை மட்டும் கேளுங்கள் என்று செய்தியாளர்களிடம் கேட்டுக்கொண்டார். வெற்றிடம் குறித்த விவேக்கின் பதில் அனைவரையும் கவர்ந்தது
#HappyBirthdayVivek Actor விவேக் பிறந்த தினம் :தமிழகத்தில் வெற்றிடம் உள்ளதா? - Vivek நகைச்சுவை #ActorVivek pic.twitter.com/lCHXzNv1uc
— IBC Tamil (@ibctamilmedia) November 19, 2019
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com