எப்பவாவது ஹிட் குடுத்தா ஓகே. எப்ப பாத்தாலும் ஹிட் குடுத்தா எப்பிடி? 'கர்ணன்' படத்திற்கு பிரபல நடிகரின் விமர்சனம்!

  • IndiaGlitz, [Saturday,April 10 2021]

தனுஷ் நடித்த வடசென்னை, மாரி 2, அசுரன், பட்டாஸ் ஆகிய நான்கு திரைப்படங்கள் தொடர்ச்சியாக ஹிட் ஆகியுள்ள நிலையில் நேற்று வெளியான ‘கர்ணன்’ திரைப்படமும் சூப்பர் ஹிட் ஆகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. நேற்று ஒரே நாளில் தமிழகம் முழுவதும் 10 கோடி ரூபாய்க்கும் அதிகமாக இந்த படம் வசூல் செய்யப்பட்டுள்ளதாக டிரேடிங் வட்டாரங்கள் கூறுகின்றன.

இந்த நிலையில் ‘கர்ணன்’ படத்திற்கு ரசிகர்கள் மட்டுமின்றி திரையுலக பிரபலங்களும் இந்த படத்தை கொண்டாடி வருகின்றனர் என்பதும், அவர்கள் தங்களது சமூக வலைத்தளத்தில் தனுசுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில் இந்த படத்தை பார்த்த பிரபல காமெடி நடிகர் விவேக் தனது டுவிட்டர் பக்கத்தில் ’எப்பவாவது ஹிட் கொடுத்தா ஓகே, எப்ப பார்த்தாலும் ஹிட் கொடுத்தா எப்படி தனுஷ் ப்ரோ? கர்ணன் படக்குழுவிற்கு எனது வாழ்த்துக்கள்' என்று கூறியுள்ளார்.

தனுஷுடன் விவேக் நடித்த ’படிக்காதவன்’ படத்தில் இதே போன்ற ஒரு வசனம் வரும் என்றும் அந்த வசனத்தின் பாணியிலேயே ‘கர்ணன்’ படக்குழுவினர்களுக்கு தனது வாழ்த்துக்களை விவேக் தெரிவித்து உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

More News

இந்த அழகான மனிதரை சந்தித்ததில் பெருமைப்படுகிறேன்: துருவ் விக்ரமின் செல்பி

விக்ரமின் மகன் துருவ் விக்ரம், 'வர்மா' என்ற படத்தில் அறிமுகமானார் என்பதும் அவர் தற்போது தந்தை விக்ரமுடன் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறார்

இரவு நேர ஊரடங்கு எப்படி...? தமிழக அரசு எச்சரிக்கை...!

கொரோனாவை தடுக்க கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட நிலையில், தொற்றின் தாக்கத்தை பொறுத்து இரவு நேர ஊரடங்கு விதிக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. 

ஒரே மரம், 300 வகை மாம்பழம்...! 80-வயது மேங்கோ மேனின் கதை...!

இந்தியாவில், உத்திரப்பிரதேச மாநிலத்தில், தலைநகரான லக்னோவிற்கு அருகில் உள்ள நர்சரியில், மிகப்பெரிய வித்தியாசமான மாம்பழ மரம் ஒன்று உள்ளது. நீங்கள் அம்மரத்தை ஊற்றுபார்த்தீர்கள் என்றால் தெரியும்,

ராயல் என்ஃபீல்டு பைக்கில் 'மாஸ்டர்' நடிகை: வேற லெவலில் வைரல்!

தளபதி விஜய் நடித்த 'மாஸ்டர்' திரைப்படத்தில் நாயகியாக நடித்த மாளவிகா மோகனன் தற்போது தனுஷ் நடிக்கும் அடுத்த படத்தில் நடித்து வருகிறார் என்பதும் அது தவிர பாலிவுட் திரைப்படம்

ரசிகரின் செல்போனை அஜித் பிடுங்கிய விவகாரம்: ஆரியின் வேற லெவல் பதில்!

தமிழகத்தில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் சட்டமன்ற பொதுத்தேர்தல் நடைபெற்ற போது தல அஜித் தனது ஜனநாயக கடமையை ஆற்ற மனைவியுடன் திருவான்மியூர் வாக்குச்சாவடிக்கு சென்று இருந்தார்