பிகிலுக்கு கொடுக்கும் எழுச்சியை இதற்கும் கொடுங்கள்: நடிகர் விவேக் வேண்டுகோள்

  • IndiaGlitz, [Wednesday,July 31 2019]

பிகில் படத்திற்கு கொடுக்கும் எழுச்சியை தாய் மண்ணுக்காகவும் மரங்களுக்காகவும் கொடுக்க வேண்டும் என நடிகர் விவேக், மாணவர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் பிறந்த நாளை முன்னிட்டு நடந்த மரக்கன்றுகள் நடும் விழா ஒன்றில் நடிகர் விவேக் பங்கேற்றார். இந்த நிகழ்ச்சியில் விவேக் பேசியபோது, 'நான் தற்போது பிகில் படப்பிடிப்புக்குத்தான் செல்கிறேன்' என்று கூறினார். உடனே அங்கு கூடியிருந்த மாணவர்கள் பெரும் கரகோஷம் எழுப்பினர்.

உடனே தனது உரையை தொடர்ந்த விவேக், 'பிகில் என்று சொன்னதும் ஒரு எழுச்சி ஏற்பட்டது. இதே எழுச்சியை நம் தாய் மண்ணுக்காக, மரங்களுக்காக கொடுக்க வேண்டும் என்று மாணவர்களை வேண்டி கேட்டுக்கொள்கிறேன்' என்று விவேக் கோரிக்கை விடுத்துள்ளார். மேலும் இதுகுறித்த வீடியோவையும் அவர் தனது சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

சமூக வலைத்தளங்களில் மாஸ் காட்டும் விஜய் ரசிகர்கள் 'பிகில்' படத்திற்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை விவேக் கூறியது போல் மரம் வளர்க்கும் விழிப்புணர்ச்சியிலும் காட்டினால் தமிழ்நாடு பசுமை நாடாக மாறிவிடும் என்பதில் சந்தேகமில்லை.