சத்யஜோதி தயாரிக்கும் படத்தை இயக்கவிருந்தாரா விவேக்? புதிய தகவல்
Send us your feedback to audioarticles@vaarta.com
பிரபல காமெடி நடிகரான விவேக் ஆரம்பகாலத்தில் கே.பாலச்சந்தர் அவர்களுக்கு திரைக்கதை எழுதுவதில் உதவியாளராக இருந்ததாக செய்திகள் வெளியானது. இந்த நிலையில் அவர் ஒரு திரைப்படத்தை முதன்முதலாக இயக்க என்பதாகவும் அந்த திரைப்படத்தை தங்கள் நிறுவனம் தயாரிக்க இருந்ததாகவும் ஆனால் அதற்குள் அவர் எதிர்பாராத விதமாக மறைந்து விட்டார் என்றும் சத்யஜோதி நிறுவனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அந்நிறுவனம் மேலும் கூறியிருப்பதாவது:
பத்மஸ்ரீ திரு.விவேக்கின் மறைவு நாம் அனைவரையும் மிகுந்த சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அவர் ஒரு நல்ல மனிதர், சமூக ஆர்வலர் நகைச்சுவையாளர், பகுத்தறிவாளர், மட்டுமல்லாது எதிர்கால ஒரு சிறந்த இயக்குநரையும் நாம் இழந்துவிட்டோம். ஆம், கடந்த ஒரு மாத காலமாக எங்கள் சத்யஜோதி நிறுவனத்திற்கு வந்து எங்களது தயாரிப்பில் தான் அவருடைய முதல் படத்தை இயக்க வேண்டும் என்று விருப்பப்பட்டு, பலமுறை ஆலோசனைகளிலும் ஈடுபட்டு, படத்திற்கான முன்னேற்பாடுகளையும் நடிகர் நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் தேர்வு நடந்து கொண்டிருக்கும் தருவாயில், அவர் மறைந்த செய்தி எங்களை மிகுந்த வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது.
அவர் ஒரு சிறந்த இயக்குனர் என்ற மற்றொரு பரிணாமத்தை நம்மிடையே காண்பிக்கும் முன்பே இறைவனடி சேர்ந்தது நமது துரதிர்ஷ்டமே. அவருடைய ஆன்மா சாந்தி அடைய இறைவனை வேண்டிக்கொள்கிறோம்’ என்று தெரிவித்துள்ளது. இதனை அடுத்து ஒரு நல்ல நகைச்சுவை நடிகரை மட்டுமின்றி ஒரு சிறந்த இயக்குனரையும் நாம் இழந்து விட்டோம் என்பது தெரியவருகிறது.
Rest in peace Vivek sir. pic.twitter.com/87SWdTMS6G
— TG Thyagarajan (@TGThyagarajan) April 17, 2021
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com