பிரதமர் மோடி கேரக்டரில் நடிக்கும் அஜித் பட வில்லன்
Send us your feedback to audioarticles@vaarta.com
முன்னாள் இந்திய பிரதமர் மன்மோகன்சிங் அவர்களின் வாழ்க்கை வரலாறு திரைப்படமான 'தி ஆக்சிடெண்டல் பிரைம் மினிஸ்டர்' என்ற திரைப்படம் வரும் 11ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்த நிலையில் பிரதமர் மோடியின் வாழ்க்கை வரலாறு திரைப்படமும் உருவாகவுள்ளது.
இந்த படத்தில் பிரதமர் மோடியின் வேடத்தில் பிரபல பாலிவுட் நடிகர் விவேக் ஓபராய் நடிக்கவிருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது. இவர் அஜித் நடித்த 'விவேகம்' படத்தில் வில்லனாக நடித்தவரும் பல பாலிவுட் படங்களில் ஹீரோவாக நடித்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது
இந்த படத்திற்கு 'பிஎம் நரேந்திரமோடி' என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாகவும், இந்த படத்தை பிரபல பாலிவுட் இயக்குனர் ஓமங் குமார் இயக்கவுள்ளதாகவும் தெரிகிறது. மேலும் இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் ஜனவரி 7ஆம் தேதி மகாராஷ்டிர முதல்வர் வெளியாகவிடவிருப்பதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout