'விவேகம்' படத்தில் விவேக் ஓபராய் ஏற்படுத்திய ஆச்சர்யம்
- IndiaGlitz, [Monday,May 29 2017]
சிறுத்தை சிவா இயக்கத்தில் தல அஜித் நடித்துள்ள 'விவேகம்' படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்துள்ள நிலையில் இந்த படத்தில் அஜித், சிக்ஸ்பேக், ரிஸ்கான, டூப் இல்லாத சண்டைக்காட்சிகள் ஆகியவற்றுக்காக மிகுந்த சிரத்தை எடுத்துள்ளதாக அவ்வப்போது வெளிவந்த செய்திகளை பார்த்தோம்.
இந்த நிலையில் முதல்முறையாக அஜித்துக்கு இணையாக இந்த படத்தில் வில்லன் வேடத்தில் நடித்துள்ள விவேக் ஓபராயும் இதுவரை இல்லாத அதிகபட்ச ரிஸ்க்கை இந்த படத்தின் ஸ்டண்ட் காட்சிகளுக்கு எடுத்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.
பெல்கிரேடு விமான தளத்தில் இராணுவ வாகனங்களை இயக்கும் காட்சிகளில் விவேக் ரிஸ்க் எடுத்து நடித்ததாகவும்,அதுவும் அந்த காட்சிகள் படமாக்கப்படும் போது அந்த இடத்தில் மைனஸ் 12 டிகிரி தட்பவெப்ப நிலை இருந்ததாகவும், இருப்பினும் அசராமல் விவேக் ஓபராய் படப்பிடிப்புக்கு ஒத்துழைப்பு கொடுத்ததாகவும் படக்குழுவினர் ஆச்சரியத்துடன் தெரிவித்துள்ளனர்.
மேலும் இந்த படத்தின் பட்ஜெட் ரூ.100 கோடியை தாண்டிவிட்டதாகவும், இதுவரை தயாரான அஜித் படங்களில் இந்த படம் தான் அதிக பட்ஜெட்டில் தயாரான படம் என்றும் செய்திகள் வெளிவந்துள்ளது. அதுமட்டுமின்றி இந்த படத்தில் விவேக் ஓபராய் நடித்துள்ளதால் தமிழில் வெளியாகும் அதே நாளில் இந்தியிலும் வெளியிட திட்டமிட்டுருப்பதாகவும், கூறப்படுகிறது.
அஜித், காஜல், அகர்வால், அக்சராஹாசன் உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.