'அஜித் 57' படப்பிடிப்பில் கலந்து கொள்வது எப்போது? விவேக் ஓபராய்

  • IndiaGlitz, [Wednesday,November 23 2016]

தல அஜித் நடித்து வரும் 'தல 57' படத்தின் படப்பிடிப்பு பல்கேரியாவில் நடைபெற்று வருகிறது. இந்த படப்பிடிப்பில் நேற்று முதல் அஜித்துடன் அக்சராஹாசன் கலந்து கொண்டார் என்று வெளிவந்த செய்தியினை ஏற்கனவே பார்த்தோம்.
இந்நிலையில் இந்த படத்தின் வில்லனாக பிரபல பாலிவுட் நடிகர் விவேக் ஓபராய் நடிப்பதாக செய்தி வெளிவந்தது. இந்த செய்தியை விவேக் ஓபராய் அவர்களே தற்போது உறுதி செய்துள்ளார். நேற்று நடைபெற்ற திரைப்பட விழா ஒன்றில் பேசிய விவேக் ஓபராய், 'ஒன் அண்ட் ஒன்லி சூப்பர் ஸ்டார் அஜித்துடன் ஒரு தமிழ் படத்தில் நடிக்கவுள்ளேன். இந்த படத்தின் படப்பிடிப்பில் இம்மாத இறுதியில் கலந்து கொள்ளவுள்ளேன். அஜித் அண்ணா அவர்களுடன் இணைந்து நடிப்பதில் நான் உண்மையிலேயே பெருமைப்படுகிறேன்' என்று கூறியுள்ளார்.
ரஜினியின் '2.0' படத்தில் வில்லனாக அக்சயகுமார் நடித்து வருவதை அடுத்து இன்னொரு பிரபல பாலிவுட் ஹீரோ விவேக் ஓபராய், தற்போது அஜித்தின் 'தல 57' படத்தில் வில்லனாக நடிப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
சிறுத்தை சிவா இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில் உருவாகி வரும் இந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

பிரபல இயக்குனர் கே.சுபாஷ் காலமானார்.

பிரபல தமிழ் திரைப்பட இயக்குனர் கே.சுபாஷ் காலமானர்.

'பாகுபலி 2' வீடியோவை கசியவிட்ட வீடியோ எடிட்டர் கைது

இந்தியாவின் பிரமாண்டமான திரைப்படங்களில் ஒன்றாகிய 'பாகுபலி' படத்தின் மிகப்பெரிய வெற்றியை அடுத்து....

கருப்புப்பண உலகின் ஒரே வெள்ளை கலைஞன் கமல். ஆஸ்கார் ரவிச்சந்திரன்

மத்திய அரசின் ரூ.500, ரூ.1000 செல்லாது என்ற அறிவிப்பு பொதுமக்களை மட்டுமின்றி திரையுலகிலும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது...

நட்டி நட்ராஜூக்கு ஓகே ஆன 'போங்கு'

சதுரங்க வேட்டை' புகழ் நட்டி நட்ராஜ் நடித்த 'போங்கு' திரைப்படத்தின் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகள் முடிந்து ரிலீஸ்...

ரூ.2000 நோட்டு குறித்து வாட்ஸ் அப்பில் பரவும் பயங்கர வதந்தி

பாரத பிரதமர் நரேந்திரமோடி கடந்த 8ஆம் தேதி ரூ.500 மற்றும் ரூ.1000 செல்லாது என்று அறிவித்தார். அதன்பின்னர் இந்தியாவில் ரூ.2000 நோட்டு அறிமுகம் செய்யப்பட்டது...