ஐஸ்வர்யாராய் குறித்த சர்ச்சை மீம்ஸ்: வருத்தம் தெரிவித்த நடிகர்!

  • IndiaGlitz, [Tuesday,May 21 2019]

நேற்று முன் தினம் மக்களவை தேர்தலின் பிந்தைய கருத்துக்கணிப்பு குறித்த தகவல்கள் ஊடகங்களில் வெளிவந்து கொண்டிருந்தபோது அஜித்தின் 'விவேகம்' படத்தில் நடித்த நடிகர் விவேக் ஓபராய் தனது சமூக வலைத்தள பக்கத்தில் எக்சிட்ப்போல் குறித்து சர்ச்சைக்குரிய ஒரு மீம்ஸை பதிவு செய்தார். அந்த மீம்ஸில் நடிகை ஐஸ்வர்யாராய் குறித்த ஒரு சர்ச்சைக்குரிய தகவல் பதிவு செய்யப்பட்டிருந்தது.

இந்த பதிவிற்கு ஐஸ்வர்யாராய் தரப்பில் இருந்து எந்தவித ரியாக்சனும் வெளிவரவில்லை என்றாலும், சமூக ஆர்வலர்கள், மகளிர் அமைப்புகள், திரையுலகினர் உள்பட பலர் விவேக் ஓபராய்க்கு தொடர்ந்து கண்டனங்களை தெரிவித்து வந்தனர். மேலும் இதுகுறித்து விளக்கம் கேட்டு தேசிய பெண்கள் ஆணையம் விவேக் ஓபராய்க்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

இந்த நிலையில் தனது டுவிட்டர் பக்கத்தில் இருந்து அந்த சர்ச்சைக்குரிய மீம்ஸை நீக்கிவிட்ட விவேக் ஓபராய், 'ஒருசிலரால் நகைச்சுவையாக பார்க்கக்கூடிய ஒரு விஷயம் வேறு சிலரால் அவ்வாறு பார்க்கப்படுவதில்லை. நான் எந்த நேரத்திலும் பெண்களை அவமரியாதையாக நினைத்ததே இல்லை. கடந்த 10 ஆண்டுகளில் சுமார் 2000 பெண்களின் நல்வாழ்விற்கு உதவி செய்துள்ளேன். இருப்பினும் எனது பதிவு பலரது மனதை புண்படுத்தியதாக அறிந்ததால் அந்த பதிவை நீக்கிவிட்டேன். மேலும் இதற்காக நான் வருத்தம் தெரிவித்து கொள்கிறேன்' என்று விவேக் ஓபராய் தெரிவித்துள்ளார்.

More News

கேடிஎம் பைக்குகளை குறிவைத்து திருடிய சென்னை இளைஞன் கைது!

விலை உயர்ந்த கேடிஎம் பைக்குகளை குறிவைத்து திருடிய சென்னை இளைஞன் ஒருவனை போலீசார் குறிவைத்து பிடித்து கைது செய்துள்ளனர்.

சரத்குமார், ராதிகாவுடன் விஷால் ரகசிய சந்திப்பா?

நடிகர் சங்க தேர்தல் விரைவில் நடைபெறவுள்ள நிலையில் நாசர், விஷால், கார்த்தி உள்பட பலர் மீண்டும் போட்டியிட போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

'ஒன்றரை டன் வெயிட்டுடா'! சூர்யாவின் பதிலுக்கு சிஎஸ்கே கமெண்ட்

நடிகர் சூர்யா இன்று டுவிட்டரில் நேரலையில் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார் என்பதை சற்றுமுன் பார்த்தோம்

ஆறு கதை, ஆறு டெக்னீஷியன்கள்: வெங்கட்பிரபு-சிம்புதேவன் படத்தில் புதுமை

இயக்குனர் வெங்கட்பிரபுவின் பிளாக் டிக்கெட் கம்பெனியின் அடுத்த தயாரிப்பு திரைப்படத்தை இயக்குனர் சிம்புதேவன் இயக்கவுள்ளதாக வெளிவந்த செய்தியை சிலமணி நேரங்களுக்கு முன் பார்த்தோம்.

விக்ரமின் அடுத்த பட இயக்குனர் அறிவிப்பு!

சீயான் விக்ரம் நடிக்கவுள்ள 58வது படத்தின் அறிவிப்பு இன்று இரவு 7 மணிக்கு அறிவிக்கப்படவிருப்பதாக வெளிவந்த செய்தியை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் தற்போது இதுகுறித்த அறிவிப்பு வெளிவந்துள்ளது.