மீண்டும் இணையும் 'என்னை அறிந்தால்' கூட்டணி

  • IndiaGlitz, [Wednesday,June 27 2018]

அஜித் நடிப்பில் கவுதம் மேனன் இயக்கிய 'என்னை அறிந்தால்' திரைப்படம் நல்ல வெற்றி பெற்ற நிலையில் இந்த படத்தில் போலீஸ் கேரக்டர்களில் நடித்திருந்த அஜித்-விவேக் கூட்டணிக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இந்த நிலையில் இதே கூட்டணி மீண்டும் 'விசுவாசம்' படத்தில் இணையவுள்ளது

அஜித் நடிப்பில் இயக்குனர் சிவா இயக்கி வரும் 'விசுவாசம்' படத்தின் ஒரு முக்கிய கேரக்டரில் விவேக் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. 'வீரம்', 'என்னை அறிந்தால்' உள்பட பல அஜித் படங்களில் விவேக் நடித்திருந்தாலும் இந்த படத்தில் அவருடைய கேரக்டர் கதையுடன் ஒன்றி வருவதாகவும், இதனால் இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரிக்கும் என்றும் கூறப்படுகிறது.

இந்த படத்தில் இணைவது குறித்து விவேக் தனது சமூக வலைத்தளத்தில் கூறியபோது, 'அன்பு நண்பர் அஜீத்துடன் மீண்டும் கரம் கோர்ப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன் . வாழ்த்திய ரசிகப் பெருமக்களுக்கு என் நன்றிகள். எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்வேன்.

அஜித், நயன் தாரா, உள்பட பலர் நடித்து வரும் இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் ஐதராபாத்தில் முடிவடைந்த நிலையில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது. டி.இமான் இசையமைக்கும் இந்த படத்தை பெரும் பொருட்செலவில் சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது

More News

இளம் இயக்குனருடன் இணைகிறாரா சிம்பு?

மணிரத்னம் இயக்கத்தில் 'செக்க சிவந்த வானம்' படத்தில் நடித்து முடித்துள்ள நடிகர் சிம்புவின் அடுத்த படம் என்னவாக இருக்கும் என்பதை தெரிந்து கொள்ள அவரது ரசிகர்கள் பெரும் ஆர்வத்தில் உள்ளனர்

'வடசென்னை'யை அடுத்து முடிவுக்கு வந்தது தனுஷின் அடுத்த படம்

வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்து வந்த 'வடசென்னை' திரைப்படத்தின் முதல் பாக படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது என்பது தெரிந்ததே.

சிவகார்த்திகேயனின் அடுத்த படம் குறித்த முக்கிய அறிவிப்பு

நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது பொன்ராம் இயக்கத்தில் 'சீமராஜா' என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார்.

வெளில போகட்டும்: மமதியை கார்னர் செய்த மகத்

பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஒவ்வொரு புரமோ வீடியோவும் அந்த நிகழ்ச்சியை பார்க்க தூண்டும் வகையில் எடிட் செய்யப்படுவதே இந்த நிகழ்ச்சியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக உள்ளது

பாடகி ஜானகி குறித்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த மகன்

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி காலமாகிவிட்டதாக கடந்த சில மணி நேரங்களாக ஒருசில இணையதளங்களிலும் சமூக வலைத்தளங்களிலும் காட்டுத்தீ போல் வதந்தி பரவி வருகிறது.