ஜெயா டி.வி, நமது எம்.ஜி.ஆரை யாராலும் கைப்பற்ற முடியாது: விவேக் ஜெயராமன் பதிலடி
- IndiaGlitz, [Tuesday,August 29 2017]
சமீபத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அதிமுக நிர்வாகிகளின் கூட்டம் நடந்தபோது நான்கு முக்கிய தீர்மானங்கள் இயற்றப்பட்டது. அவற்றில் ஒன்று ஜெயா டிவியையும், நமது எம்ஜிஆர் பத்திரிகையையும் கைப்பற்ற வேண்டும் என்பது. இதுகுறித்து பதிலடி கொடுக்கும் வகையில் ஜெயா டி.வி-யின் விவேக் ஜெயராமன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் கூடிய சிலர் ஜெயா தொலைக்காட்சியையும் நமது எம்.ஜி.ஆரையும் மீட்க சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தீர்மானம் இயற்றி இருக்கிறார்கள். இது மிக வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. ஜெயா தொலைக்காட்சியும் 'நமது எம்.ஜி.ஆர்' நாளேடும் தனியார் நிறுவனங்கள். யாரும் சர்வ சாதரணமாக உள்ளே புகுந்து கைவசமாக்கக் கூடிய நிலையில் இரு நிறுவனங்களும் இல்லை. இந்த விவரங்கள் தெரிந்திருந்தும், அதிகாரம் கையில் இருக்கிறது என்பதற்காக ஜெயா தொலைக்காட்சியை மீட்கப் போவதாக தீர்மானம் இயற்றி இருப்பது மக்கள் அபிமானம் பெற்ற ஓர் ஊடகத்துக்கு விடப்பட்டிருக்கும் பகிரங்க மிரட்டலாகத்தான் தெரிகிறது. இருப்பினும் இந்த மிரட்டல்களை நெஞ்சிறுதியோடு எதிர்த்து நிற்போம்'
இவ்வாறு விவேக் ஜெயராமன் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.