நடிகர் விவேக் உடல்நிலை கவலைக்கிடம், தடுப்பூசியால் பிரச்சனையா? மருத்துவர்கள் விளக்கம்

  • IndiaGlitz, [Friday,April 16 2021]

தமிழ் திரை உலகின் முன்னணி காமெடி நடிகர் விவேக் அவர்கள் இன்று காலை திடீரென மாரடைப்பு காரணமாக சென்னை வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார் என்ற செய்தியை ஏற்கனவே பார்த்தோம். அவருக்கு மூச்சுத்திணறல் இருப்பதால் எக்மோ கருவியும் பொருத்தப்பட்டதாக சற்று முன்னர் செய்திகள் வெளியானது

மேலும் விவேக் அவர்கள் விரைவில் குணமாக வேண்டும் என துணை முதல்வர் ஓபிஎஸ், கவிப்பேரரசு வைரமுத்து உள்பட பல திரையுலகினர் மற்றும் அரசியல்வாதிகள் வாழ்த்து தெரிவித்து வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் சற்று முன் வெளியான தகவலின் படி விவேக்கின் உடல்நிலை குறித்து மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது. விவேக் அவர்கள் இன்று காலை 11 மணிக்கு அவருடைய குடும்பத்தினரால் எங்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு ஆஞ்சியோகிராம் மற்றும் எக்மோ கருவிகள் பொருத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இப்போதைய நிலையில் அவரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது. ஆனால் அதே நேரத்தில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டதால் அவருக்கு இந்த பிரச்சனை வரவில்லை’ என்று விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது