ஊட்டியில் மரங்கள் இருந்தும் பயனில்லை: வெற்றிமாறனுக்கு விவேக் பதிலடி!
- IndiaGlitz, [Monday,July 01 2019]
நடிகர் விவேக் திரைப்படங்களில் நடித்து கொண்டிருப்பதோடு அவ்வப்போது மரங்கள் நடும் சமூக பணியையும் செய்து கொண்டிருக்கின்றார் என்பது தெரிந்ததே. அந்த வகையில் ஜூலை 1ஆம் தேதியான இன்று ஊட்டியில் மரங்கள் நடும் விழாவில் கலந்து கொள்ள போவதாகவும், அருகில் இருக்கும் மக்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளலாம் என்றும் தனது சமூக வலைத்தளத்தில் அறிவித்திருந்தார்.
இந்த அறிவிப்புக்கு வெற்றிமாறன் என்ற டுவிட்டர் பயனாளி கூறுகையில், 'ஊட்டியில் நிறைய மரங்கள் உள்ளது. எனவே மரங்கள் இல்லாத பகுதிகளில் கவனம் செலுத்தி அதிக மரங்களை நடலாம்' என்று கருத்து தெரிவித்திருந்தார்.
டுவிட்டர் பயனாளி வெற்றிமாறனுக்கு பதிலளித்த விவேக், 'ஊட்டியில் நிறைய மரங்கள் இருக்கலாம். ஆனால் மழை இல்லை. காரணம் யூக்கலிப்ட் சில்வர்ஓக், கிருத்துமசு மரங்களால் மழையை ஈர்க்க முடியாது. அவை நிலத்தடி நீரை உரிஞ்சுவதோடு அதை ஆவியாக்குவதும் இல்லை. மலை நாட்டு மரங்கள் நடப்பட வேண்டும்' என்று கூறினார்.
நாளை ஜூலை1, ஊட்டிக்கு அருகில் இருக்கும் எல்ல நள்ளி என்ற இடத்தில் கலெக்டருடன் இணைந்து sweep blue mountain n tree planting நிகழ்வில் கலந்து கொள்கிறேன். அருகிருப்போர் வருக. Ooty is the queen of mountains n letz preserve n protect her from plastic.
— Vivekh actor (@Actor_Vivek) June 30, 2019
ஊட்டியில் நிறைய மரங்கள் இருக்கலாம். ஆனால் மழை இல்லை. காரணம் யூக்கலிப்ட் சில்வர்ஓக், கிருத்துமசு மரங்களால் மழையை ஈர்க்க முடியாது.அவை நிலத்தடி நீரை உரிஞ்சுவதோடு அதை ஆவியாக்குவதும் இல்லை. மலை நாட்டு மரங்கள் நடப்பட வேண்டும் https://t.co/yMftuSQrsz
— Vivekh actor (@Actor_Vivek) June 30, 2019