நான் பேசியதை அந்த டிவி மாற்றிவிட்டது: நடிகர் விவேக்
Send us your feedback to audioarticles@vaarta.com
முன்னாள் ஜனாதிபதியும் விஞ்ஞானியுமான அப்துல் கலாமின் அவர்களின் 88-வது பிறந்தநாள் விழா சென்னையில் உள்ள ஒரு பள்ளியில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட நடிகர் விவேக், மாணவ, மாணவிகளிடையே பேசியபோது, மரங்கள் வளர்ப்பது குறித்த விழிப்புணர்ச்சி குறித்தும், ஒருவேளை தேச வளர்ச்சி திட்டங்களுக்காக மரங்கள் வெட்டப்பட்டால் பசுமை தீர்ப்பாயத்தின் தீர்ப்பின்படி என்ன செய்ய வேண்டும் என்பது குறித்தும் பேசினார்.
ஆனால் விவேக்கின் இந்த பேச்சை செய்தியாக வெளியிட்ட ஒரு ஊடகம், வளர்ச்சி என்ற பெயரில் மரங்கள் வெட்டுவதை தடுக்க வேண்டும் என விவேக் கூறியதாக செய்தி வெளியிட்டிருந்தது. இதுகுறித்து நடிகர் விவேக் தனது சமூக வலைத்தள பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறியதாவது:
நான் பேசியது தேச வளர்ச்சிக்காக மரம் வெட்டப்பட்டாலும் ... ஒரு மரம் வெட்டப்பட்டால் 10 மரங்கள் நடப்பட வேண்டும் என்பது பசுமை தீர்ப்பாயத்தின் தீர்ப்பு. அதை பின்பற்ற வேண்டும்”என்பதுதான். ஆனால் செய்தி வெளியிட்ட டிவி கொஞ்சம் மாற்றி போட்டிருக்கிறது. அதனை திருத்தி செய்தி வெளியிடும்படி கேட்டுக்கொள்வதாக விவேக் குறிப்பிட்டிருந்தார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout