நடிகர் விவேக் மைத்துனருக்கு கொரோனா: அரசு மருத்துவமனையில் அனுமதி!
Send us your feedback to audioarticles@vaarta.com
கொரோனா வைரஸால் பல திரையுலக பிரமுகர்கள் பாதிக்கப்பட்டு வருவது குறித்த செய்திகளை அவ்வப்போது பார்த்து வருகிறோம். நேற்று அமிதாப்பச்சன் குடும்பத்திலுள்ள நால்வருக்கும் அனுபம்கெர் குடும்பத்தில் உள்ள நால்வருக்கும் கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டதாகவும் இதனையடுத்து அவர்கள் சிகிச்சை பெற்று வருவதாகவும் வெளிவந்த செய்திகளை பார்த்தோம்.
இந்த நிலையில் தமிழ் சினிமாவின் முன்னணி காமெடி நடிகர்களில் ஒருவரான நடிகர் விவேக்கின் மைத்துனருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் இதனை அடுத்து அவர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயர்தர சிகிச்சை பெற்று குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது.
இதுகுறித்து நடிகர் விவேக் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியதாவது: எனது மைத்துனர், கொரோனாவால்) காய்ச்சல், மூச்சுத் திணறலுடன் ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 10 நாட்களில் முற்றிலும் குணமடைந்தார். எளிய இடம் ஆனால் சிறந்த மருத்துவ வசதி, சிகிச்சை, தரமான உணவு கிடைத்ததாம். அரசு மருத்துவர்களுக்கு நன்றி’ இவ்வாறு நடிகர் விவேக் தனது டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார்.
எனது மைத்துனர்,கொரோனாவால்) காய்ச்சல்,மூச்சுத் திணறலுடன் ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.10 நாட்களில் முற்றிலும் குணமடைந்தார். எளிய இடம் ஆனால் சிறந்த மருத்துவ வசதி,சிகிச்சை,தரமான உணவு கிடைத்ததாம். அரசு மருத்துவர்களுக்கு நன்றி @Vijayabaskarofl @RAKRI1 @dromramesh
— Vivekh actor (@Actor_Vivek) July 13, 2020
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout