'இந்தியன் 2' குறித்த வதந்திக்கு நடிகர் விவேக் வைத்த முற்றுப்புள்ளி
Send us your feedback to audioarticles@vaarta.com
கமல்ஹாசன் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் 'இந்தியன் 2' படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் சமீபத்தில் வெளியான இந்த படத்தின் ஃபர்ஸ்லுக் போஸ்டரில் பாடலாசிரியர்கள் பெயர் பட்டியலில் பாடலாசிரியர் விவேக் பெயர் இருந்தது.
இதனை வைத்து ஒருசிலர் 'இந்தியன் 2' படத்தில் நடிகர் விவேக் நடிக்கவுள்ளதாக வதந்தியை கிளப்பினர். இந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் 'இந்த படத்தின் கதைக்கு நான் தேவை என்றால் கண்டிப்பாக இயக்குனர் ஷங்கர் என்னை கூப்பிடுவார். அதுவரை வதந்திகள் வேண்டாம்' என்று கூறியுள்ளார்.
மேலும் 1975ஆம் ஆண்டு 'அபூர்வ ராகங்கள்' வெளியான போது தான் சாந்தோம் பள்ளியில் படித்து கொண்டிருந்ததாகவும், அந்த காலத்தில் இருந்து தான் ஒரு கமல் ரசிகர் என்றும், அவருடன் நடித்தாலும், நடிக்காவிட்டாலும் அவருடைய படங்களை பார்க்க தவறுவதில்லை என்றும் நடிகர் விவேக் குறிப்பிட்டுள்ளார்.
I m a fan of @ikamalhaasan sir from school days! 1975 apoorva ragangal time! I was studying in Santhome high school. Till now I m a fan whether I work with him or not! If the story demands me, @shankarshanmugh will definitely call. And the conversation stops.
— Vivekh actor (@Actor_Vivek) January 23, 2019
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com