சென்னை வெள்ள பாதிப்பு. அப்துல்கலாம் அன்றே கூறினார். விவேக்

  • IndiaGlitz, [Tuesday,December 15 2015]


சென்னையில் வரலாறு காணாத வகையில் கனமழை மற்றும் வெள்ளம் ஏற்பட்டு சென்னையின் இயல்பு வாழ்க்கையே புரட்டி போடப்பட்ட நிலையில் இந்த கனமழைக்கு என்ன காரணம் என்பது குறித்து நடிகர் விவேக் தனது கருத்தை வெளியிட்டுள்ளார்.


தற்போது உள்ளதை விட புவி வெப்ப மயமாதலால் இன்னும் 5 ஆண்டுகளில் 2 டிகிரி செல்சியஸ் அதிகமாகும் என்றும் அதனால் அதிக பாதிப்பு இருக்கும் என்றும் டெல்லியில் அப்துல் கலாமை சந்தித்த போது அவர் தன்னிடம் கூறியதாகவும், அவர் கூறியது தற்போது உண்மையானதாகவும் விவேக் கூறியுள்ளார்.

கடலில் தொடர்ந்து அடுத்தடுத்து குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாக காரணம் என்ன என்பது குறித்து பாரீசில் நடந்த உலக சுற்றுச்சூழல் மாநாட்டில் கூட புவி வெப்ப மயமாதலால் தான் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளதையும் விவேக் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் தனது மகனின் இழப்பில் இருந்து தற்போது கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வருவதாகவும், கார்த்தி மற்றும் உதயநிதி ஆகியோர்களின் படங்களில் தற்போது நடித்து வருவதாகவும் விவேக் கூறியுள்ளார்.