close
Choose your channels

'விவேகம்' படத்தின் 3வது பாடல் ரிலீஸ் தேதி

Thursday, July 13, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தல அஜித் நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகியுள்ள 'விவேகம்' படத்தின் சர்வைவா மற்றும் தலை விடுதலை பாடல்கள் இணையதளங்களில் பெரும் வரவேற்பை பெற்றதை அடுத்து 3வது பாடல் மிக விரைவில் வெளியாகவுள்ளதாக அனிருத் கூறியதை இன்று காலை பார்த்தோம்.

இந்த நிலையில் சற்று முன் வெளிவந்த தகவலின்படி 'விவேகம்' படத்தின் அடுத்த பாடல் வரும் 17ஆம் தேதி வெளிவரவுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. முதல் இரண்டு பாடல்கள் அதிரடி மிரட்டலான பாடலாக இருந்த நிலையில் இந்த பாடல் கர்நாடக சங்கீதத்தில் உருவான மெலடி பாடல் என்று கூறப்படுகிறது. மேலும் இந்த பாடல் ரிலீஸ் குறித்த அதிகாரபூர்வ தகவல் இன்று மாலை 5 மணிக்கு வெளியாகும் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் இந்த படத்தின் போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகள் இறுதிக்கட்டத்தில் இருப்பதாகவும், படத்தை சென்சாருக்கு அனுப்பும் பணி தொடங்கிவிட்டதாகவும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். மேலும் வரும் ஆகஸ்ட் 10ஆம் தேதி இந்த படத்தின் ரிலீஸ் தேதி என்பது கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டுவிட்டதாகவும், சென்சார் பணிகள் முடிந்தபின்னர் ரிலீஸ் தேதி குறித்த தகவல் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும் என்றும் தெரிகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment