ஃபீனிக்ஸ் பறவை மாதிரி எரிக்க எரிக்க எழுந்து வர்றான்: விவேகம் டிரைலர் விமர்சனம்
Send us your feedback to audioarticles@vaarta.com
இந்த ஆண்டின் பெரும் எதிர்பார்ப்புக்குரிய படங்களில் ஒன்றான 'விவேகம்' படத்தின் ரிலீஸ் தேதிக்கு இன்னும் ஒரு வாரம் மட்டுமே இருக்கும் நிலையில் அஜித் ரசிகர்களை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்த நேற்று நள்ளிரவு திடீரென இந்த படத்தின் டிரைலர் வெளியானது.
இரண்டு நிமிடங்கள் 25 வினாடிகள் ஓடும் இந்த டிரைலரில் ஆக்சன், ரொமான்ஸ் காட்சிகளின் கலவையாக அடங்கியுள்ளது. படக்குழுவினர் அவ்வப்போது பேட்டிகளில் கூறியது போலவே உண்மையான உலகத்தரம் இந்த டிரைலரில் தெரிந்தது.
இயக்குனர் சிவாவின் வசனம் அஜித்துக்காகவே யோசித்து எழுதியது போல் உள்ளது. குறிப்பாக ''நான் யார் என்பதை எப்போதுமே நான் முடிவு பண்றதில்லை, என் எதிர்ல நிக்கறவங்க தான் முடிவு பண்ணுவாங்க, அவங்களுக்கு நான் நண்பனா? இல்லை எதிரியான்னு" என்ற வசனமும், 'போராடாம அவன் தூங்கவும் மாட்டான், சாகவும் மாட்டான், ஃபீனிக்ஸ் பறவை மாதிரி எரிக்க எரிக்க எழுந்து வர்றான்' போன்ற வசனமும் திரையில் தோன்றும்போது கைதட்டல் விண்ணை பிளக்கும் என்பது நிச்சயம். அதேபோல் 'உன் கூட இருக்குறது சந்தோஷம் என்று சொல்வதை விட நீதான் என் சந்தோஷம்' என்ற ரொமான்ஸ் வசனமும், ரசிகர்களை நிச்சயம் கவரும். காஜல் அகர்வாலின் அழகு, அக்சராஹாசனின் ஆக்சன் என இருவருமே ஒருசில காட்சிகளில் வந்தாலும் நிறைவு தருகின்றனர். விவேக் ஓபராய் அஜித்தின் நண்பனாக வருவது போல் தோன்றுகிறது.
வெற்றியின் பளிச் கேமிராவில் வெளிநாட்டு காட்சிகள் கண்ணுக்கு விருந்தளிக்கும் வகையில் உள்ளது. அதேபோல் கச்சிதமான படத்தொகுப்பு விறுவிறுப்பை அதிகரிக்கின்றது. அனிருத்தின் ஆர்ப்பாட்டமான இசை படத்திற்கு முதுகெலும்பு போல் உள்ளது. வேஷ்டி சட்டை, யுனிபார்ம், சிக்ஸ்பேக் உள்பட பல்வேறு கெட்டப்புகளில் அஜித் தோன்றுவது அவரது ரசிகர்களுக்கு கிடைத்த விருந்தாக கொள்ளலாம். அதுமட்டுமின்றி அஜித்தின் பைக் ரைட், ரயில் சண்டை என ஆக்சன் காட்சிகள் பட்டையை கிளப்புகின்றன. You will see my rage என்று முடியும் இந்த டிரைலர் படம் வெளியாகும் ஒரு வாரம் வரை அஜித் ரசிகர்களுக்கு தாக்குப்பிடிக்கும் என்று கருதப்படுகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Contact at support@indiaglitz.com