'விவேகம்' படத்தின் விறுவிறுப்பான டிராக்லிஸ்ட் இதுதான்
Send us your feedback to audioarticles@vaarta.com
இயக்குனர் சிவா இயக்கத்தில் தல அஜித், காஜல் அகர்வால், அக்சராஹாசன், விவேக் ஓபராய், கருணாகரன் உள்பட பலர் நடித்துள்ள 'விவேகம்' படத்தின் பாடல்கள் முன்னோட்ட வீடியோ வெளியாகி இணையதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது என்பதை பார்த்தோம். இந்த நிலையில் இந்த படத்தின் பாடல்கள் டிராக் லிஸ்ட் இந்த வீடியோ மூலம் தெரியவந்துள்ளது. டிராக் லிஸ்ட் தனியாக வெளிவரவில்லை என்றாலும் இந்த வீடியோ மூலம் அதை நாம் தெரிந்து கொள்ளலாம்.
இதோ இதுதான் 'விவேகம்' பட பாடலின் டிராக் லிஸ்ட்
1. நெவர் எவர் கிப் அப்: 'விவேகம்' படத்தின் டீசரில் அஜித் பேசும் இந்த பஞ்ச் டயலாக் பாடலாகவே உருவாகியுள்ளது. அனிருத் மற்றும் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரை சேர்ந்த ராஜகுமாரி ஆகியோர் பாடிய இந்த பாடல் திரையில் அமர்க்களப்படுத்தும் என்பது உறுதி.
2. காதலாட: சமீபத்தில் வெளிவந்து அனைவரின் பாராட்டை பெற்ற மெலடி ரொமான்ஸ் பாடலான இந்த பாடலை அனிருத், சாஷா திருபதி, நம்ரிதா மற்றும் பூஜா ஆகியோர் பாடியுள்ளனர்.
காதலாட காதலாட காத்திருந்தேனே..
ஆசை நூலில் பாச பூக்கள் கோர்த்திருந்தேனே..
செய்யாத மாதவம் நீயே
பொய்யாத பேரருள் நீயே
ஓயாத தேன்மழை அதை ஏந்தவே புது பூமி செய்வோமே...
இந்த வரிகள் ஒவ்வொரு காதலர்களின் தேசிய கீதமாக விளங்கும்
3. 'வெறியேற' என்று தொடங்கும் இந்த மூன்றாவது பாடலை மானசி மற்றும் பூர்வி கெளதிஷ் பாடியுள்ளனர்.
தீ வருந்திட
நீ எழுந்திட
வான் அதிர்ந்திட
கண் சிவந்திட
மண் அசைந்திட
இரு கரங்களில்
இடி இறங்கிட
வீரா நீ வாடா வா
போன்ற வரிகள் அமைதியானர்களை கூட ஆக்ரோஷப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.
4. காதலாட: மீண்டும் ஒருமுறை 'விவேகம்' ஆல்பத்தில் இடம்பெற்றுள்ள இந்த பாடலை பிரதீப்குமார் மற்றும் ஷாஷா திருபதி பாடியுள்ளனர்.
5. அடுத்ததாக அனைவரும் வெறித்தனமாக எதிர்பார்த்து காத்திருக்கும் பாடல் 'தல விடுதலை' என்ற பாடலை அனிருத் மற்றும் ஹரிஷ் சுவாமிநாதன் பாடியுள்ளனர். இந்த பாடல் திரையில் வரும்போது தியேட்டர் என்ன பாடுபடும் என்பதை இப்போதே மனதில் நினைத்து பார்க்க முடிகிறது.
6. அடுத்த பாடல் ஏற்கனவே உலகம் முழுவதும் சூப்பர் ஹிட் ஆகிய 'சர்வைவா' பாடல் அனிருத் மற்றும் யோகி பி, மாலி மனோஜ் பாடிய இந்த பாடல் நிச்சயம் ஆட்டம் போட வைக்கும் என்பதில் சந்தேகமே இல்லை.
இதுபோக இந்த படத்தின் ஆல்பத்தில் ஒரு தீமி மியூசிக்கும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Contact at support@indiaglitz.com
Comments