மே-1, அஜித் பிறந்த நாளில் 'விவேகம்' படக்குழுவினர்களின் விருந்து

  • IndiaGlitz, [Sunday,April 30 2017]

தல அஜித் நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கி வரும் 'விவேகம்' படத்தின் படப்பிடிப்பு இன்னும் ஒருசில நாட்களில் முடிந்துவிடும் நிலையில் உள்ளது. இந்த படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு பல்கேரியாவில் நடந்து வருகிறது. அஜித், விவேக் ஓபராய், காஜல் அகர்வால் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.

இந்த நிலையில் நாளை மே 1, அஜித் பிறந்த நாள் வருவதை அடுத்து 'விவேகம்' படத்தின் டீசர் வெளிவர வாய்ப்பு இருப்பதாக கடந்த சில நாட்களாக செய்திகள் வெளிவந்து கொண்டிருந்தது ஆனால் தற்போது வெளிவந்துள்ள புதிய தகலின்படி, 'விவேகம்' படத்தின் இரண்டாவது லுக் போஸ்டர் வெளிவரவுள்ளதாகவும், இந்த போஸ்டர் ஸ்டைலிஷின் உச்சகட்டமாக இருக்கும் என்றும் இந்த போஸ்டர் தல ரசிகர்களுக்கு நிச்சயம் ஒரு விருந்தாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

மேலும் 'விவேகம்' படத்தின் டீசர் பணிகள் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருப்பதாகவும், வெகுவிரைவில் டீசர் வெளியீட்டு தேதி அறிவிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.

More News

துப்புரவு பணியாளர்களுக்கு 'பாகுபலி 2' பட டிக்கெட்டுக்களை கொடுத்த கலெக்டர்

பிரமாண்ட இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமெளலியின் 'பாகுபலி 2' படத்திற்கு இதுவரை இல்லாத அளவில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இன்னும் சில மணி நேரங்களில் வெளிநாடுகளில் இந்த படத்தின் முதல் காட்சி தொடங்கவுள்ள நிலையில் கட்டப்பா ரகசியம் வெகுவிரைவில் தெரிந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது...

மகாபாரதத்துடன் கனெக்சன் ஆன அஜித்தின் 'விவேகம்'

தல அஜித் நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கி வரும் 'விவேகம்' படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு ஐரோப்பிய நாடுகளில் தற்போது நடைபெற்று வருகிறது. அஜித் உள்பட படக்குழுவினர் அனைவரும் அஜித் பிறந்த நாளுக்கு முன் சென்னை திரும்புவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது...

பிரபல பாலிவுட் நடிகர் -அரசியல்வாதி திடீர் மரணம்

பாலிவுட்டின் பிரபல நடிகர், தயாரிப்பாளர், அரசியல்வாதி வினோத்கண்ணா சற்று முன் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 70...

புதிய ரூபாய் நோட்டுக்களில் நோட்டுக்களில் எழுதியிருந்தால் செல்லாதா? ரிசர்வ் வங்கி விளக்கம்

புதிய ரூ.500, ரூ.2000 நோட்டுக்களில் பேனா அல்லது பென்சிலால் ஏதாவது எழுதியிருந்தாலோ அல்லது கிறுக்கியிருந்தாலோ அந்த நோட்டு செல்லாது என்று பொதுமக்கள் மத்தியில் ஒரு வதந்தி மிக வேகமாக பரவி வரும் நிலையில் இந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் சற்று முன்னர் இந்திய ரிசர்வ் வங்கி ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது....

சென்னை மின்வெட்டுக்கு தமிழக அரசின் கடன் பாக்கி காரணமா?

தமிழகத்தின் தலைநகரான சென்னையின் பெரும்பாலான பகுதிகள் நேற்று இரவு மின்சாரம் தடை பட்டதால் இருளில் மூழ்கியது. கோடை வெப்பத்தால் இரவு முழுவதும் புழுக்கத்தின் காரணமாக சென்னை மக்கள் தூங்க முடியாமல் தவித்தனர். இந்த மின் தடைக்கு 'உயர் மின் அழுத்தப் பாதையில் ஏற்பட்ட பழுதே காரணம் என மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்...